அமைச்சரின் பெண்ணை மீட்கச்செல்லும் கம்யூனிச லட்சியத் திருடன்!

 

 

 




 

 

 

ரெச்சிப்போ


நிதின், இலியானா


கம்யூனிச கருத்து கொண்ட திருடனைப் பயன்படுத்தி உள்துறை அமைச்சரின் ஐநூறு கோடி கள்ளப்பணத்தை கொள்ளையடிக்கும் அதிகாரியின் கதை. ந்த அதிகாரியின் கதையை சொல்லியிருந்தால் கூட பார்க்க நன்றாக இருந்திருக்கும். அதையும் ஊறுகாய் போல பயன்படுத்தி இலியானாவின் தசை மேல் பயணிக்கிறது கதை.


நிதின் படத்தில் திருடனாக நடித்திருக்கிறார். திருடன்தான். ஆனால் நல்ல திருடன். பிளாட்பாரம், கோவில் வாசல் என தூங்கி எழுபவர், தான் சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு செலவிடுகிறார். ஆனால், மாது, நிலம் என செலவிடாமல் ஏழைகளுக்கு, படிக்க வேண்டிய வயதில் பிச்சை எடுக்கும் பிள்ளைகள், வேலை செய்யும் சிறுவர்களுக்கு செலவிடுகிறார்.


இப்படிப்பட்ட லட்சிய திருடனை போலீஸ் ஏறத்தாழ கைது செய்யும் அளவுக்கு அருகில் வந்துவிடுகிறது. அப்போதுதான் காவல்துறை அதிகாரி, திருடனின் கம்யூனிச லட்சியத்தை அறிந்து வியக்கிறார். நான்கு கி.மீ. ஓடிவந்து அவனுக்கு கை கொடுத்து அமைச்சரின் கள்ளப்பணத்தை திருடிச்செல்லுமாறு கூறுகிறார். திருடனுக்கு அதுபோல ஐடியா ரொம்ப புதுசு. இருந்தாலும் சவால் நிறைய இருப்பதால் அதை சாகசமாக கருதி ஏற்கிறார். திருட்டையும் செய்து முடிக்கிறார்.


ஆனால் உண்மையில் அந்த பணம் வளைகுடா நாட்டில் உள்ள மாஃபியா தலைவன் ஒருவனுக்கு சொந்தமானது. அதை அவன் திரும்ப பெற முயல்கிறான். இதற்காக அமைச்சரின் பெண்ணைக் கூட கடத்திச்செல்கிறான். வெளிநாடு சென்று அந்த பெண்ணை மீட்டு வர சூரன், தீரனான திருடனையே அனுப்புகிறது காவல்துறை. அவன் அமைச்சரின் பெண்ணை மீட்டு வந்தானா, பணத்தை திருப்பிக் கொடுத்தானா என்பதே கதை.


படத்தில் நாயகனுக்கு என எந்த பின்னணியும் கிடையாது. நட்புகள் கூட இல்லை. தத்தாரியாக திரிகிறார். நான்கு கி.மீ. ஓடும் திறன் பெற்றவர் என பெருமை பேசுகிறார். அவர் அதை பேசாதபோது, பிற காட்சிகளில் மற்றவர்கள் அவரைப் பற்றி பேசுகிறார்கள். எதற்கு நான்கு கி.மீ. தூரம் ஓடவேண்டும். கார் அல்லது பைக்கில் போகலாமே? இன்னும் கொஞ்சம் சட்டுனு போய்விடலாம்தானே? ஆனால் அப்படியெல்லாம் யோசித்தால் படம் இரண்டரை மணிநேரம் எப்படி ஓட்ட முடியும்? ரும்பு ராடை மூளையில் சொருகுவது போல படம் எடுத்திருக்கிறார்கள்.


படம் கதையை விட இலியானாவின் இடும்பில்தான் பெரும்பாலும் பயணிக்கிறது. அமைச்சரின் மகள். லட்சியத்திருடனின் காதலி. எப்போதும் இடுப்புத்துணி அவிழ்ந்துவிடுமோ என பயப்படும்படி உடை உடுத்துபவர், னால், காதலிக்கும்போது காதலன் அவளது மனதைப் பார்க்கவேண்டும் என ஆசைப்படுகிறாள். பாடல்களில் நாயகன் அதற்குத்தான் முயல்கிறார். ரசிகர்களுக்கு அந்த காட்சிகள் கொண்டாட்டமாக இருக்கும்.


துபாயில் உள்ள வில்லன் தொடக்க காட்சியில் சற்று மாறுபட்டவன் போல காட்டுகிறார்கள். ஆனால் பிறகு அவரும் வழக்கமான வில்லனாக மாறி இலியானாவின் இடுப்பைக் கிள்ள முயன்று நாயகன் சிவாவால் உதைபடுகிறார். அரே கௌலே! பரம போக்கு! தே வில்லன் தனது அடியாள் ஒருவனை, இலியானாவிடம் பாலியல் சீண்டல் செய்கிறான் என சுட்டுத்தள்ளுகிறார். எப்போதும் வெள்ளை, ஆப்பிரிக்க அமெரிக்க, லத்தீன் பெண்கள் பெல்லி டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க வில்லன் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு இலியானா எங்கே எப்படி தேவைப்படுகிறார்? முடியலடா சாமி!


துபாயில் டாக்சி டிரைவராக வரும் ரகுபாபுவின் காட்சிகளையெல்லாம் காமெடியில் சேர்ப்பதா, வன்முறை பயங்கரவாதத்தில் சேர்ப்பதா என்று தெரியவில்லை.

மைச்சரின் பிஏவாக வரும் மேதாவியான எம் எஸ் நாராயணா மட்டுமே கொஞ்சம் புன்னகைக்க வைக்கிறார். மற்றபடி மற்ற பாத்திரங்கள் எல்லாம் ஹரி படத்தில் போடுவது போல உங்கள் அபிமான நட்சத்திரங்களாக காட்சிகளில் அப்படி நின்று றைந்து போகிறார்கள்.


நாயகன் சிவாவைப் போல அல்ல. பார்வையாளர்களான நாமும் இலியானாவின் மனசைப் பார்க்கத்தான் முயன்றோம். ஆனால் எதுவும் தெரியவில்லை. அவரது இடுப்புதான் தெரிகிறது.


கோமாளிமேடை டீம் 

 

Release date: 25 September 2009 (India)
Music director: Mani Sharma

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்