இடுகைகள்

இவான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கம்பீர சிஇஓக்களின் கல்லூரி காலம்! - சுந்தர் பிச்சை முதல் இவான் ஸ்பீகல் வரை

படம்
கற்க கசடற! கீழே நீங்கள் படிக்கப்போகிறவர்கள் அனைவரும் பெரும் நிறுவனங்களை நடத்துகிறவர்கள். ஆனால் அவர்கள் அ, ஆ என்றுதானே தொடங்கியிருப்பார்கள். அப்படி புகழ்பெற்ற நிறுவனத்தின் சிஇஓக்கள் என்ன படித்திருப்பார்கள், என்ன கற்றிருப்பார்கள், எங்கு வேலை செய்திருப்பார்கள் என்று பார்ப்போம்.... சுந்தர்பிச்சை அப்ளைடு மெட்டீரியல் இஞ்சினியர். கூகுளின் இயக்குநரான சுந்தர் பிச்சை எம்எஸ் படிப்பை ஸ்டான்ஃபோர்டு பல்கலையிலும் எம்பிஏ படிப்பை பென்சில்வேனியா பல்கலையிலும் முடித்தார். பின்னர் அப்ளைடு மெட்டீரியல் நிறுவனத்தில் பொறியாளரானார். பின்னரே 2004 ஆம் ஆண்டில் கூகுளில் பொருட்களின் தயாரிப்புக்கான துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் திறமையால் கவரப்பட்ட ட்விட்டர் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய இருநிறுவனங்களும் பொறுப்பை வழங்க முன்வந்தன. ஆனால் வாய்ப்பு கிடைத்த து என்னவோ கூகுளுக்குத்தான். 2015 ஆம் ஆண்டு லாரிபேஜ் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியதும் சுந்தர் பிச்சை நிறுவனத்தின் இயக்குநராக ஆனார். ஜெஃப் பெஸோஸ் பர்கர் விற்பனையாளர் இன்று உலகம் முழுக்க ஆச்சரியமாக பார்க்கும் அமேஸான் நிறுவனத்