இடுகைகள்

அரிய உயிரினம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நன்னாரி ஸ்விஃப்ட்டே

படம்
  என்ன ?எங்கு? எப்படி? நன்னாரியா ஸ்விஃப்டே  நன்னாரியா என்ற பேரினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் கண்டறியப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு இந்த உயிரினத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும்போது நன்னாரியா இன உயிரினங்களின் எண்ணிகை 23 ஆக இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.   எங்கு? மரவட்டையான நன்னாரியா ஸ்விஃப்டே அமெரிக்காவின் தென்கிழக்கு டென்னிசியில் உள்ள அப்பளாச்சியன் மலைத்தொடரில் கண்டறியப்பட்டுள்ளது.  பெயர்க்காரணம் மரவட்டையான நன்னாரியா ஸ்விஃப்டேவை ஆய்வாளர் டெரக் ஹென்னன் கண்டறிந்தார். இவர் அமெரிக்க பாடகரான டெய்லர் ஸ்விஃப்டின் தீவிர ரசிகர். எனவே தான் கண்டறிந்த மரவட்டைக்கு ஸ்விஃப்டே என பெயர் சூட்டியிருக்கிறார். இதற்கு முன்னர் தனது மனைவியின் பெயரை மரவட்டை ஒன்றுக்கு சூட்டியுள்ளார். மனைவியுடன் நடைபயிற்சிக்கு செல்லும்போது, காணும் மரவட்டைகளை பார்க்க திடீரென நின்றுவிடுவது டெரக்கின் பழக்கம். அதை அவரின் மனைவி சகித்துக்கொண்டதால் மனைவியின் பெயரை மரவட்டைக்கு சூட்டி கௌரவப்படுத்தியிருக்கிறார்.  BBC wildlife june 2022 New specis discovery https://news.abplive.com/science/meet-nannaria-swiftae-a-milliped