இடுகைகள்

ருக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண் மருத்துவர் கங்குலி பாயை மக்கள் தேவடியா என்று அழைத்தனர்! - எழுத்தாளர் கவிதா ராவ்

படம்
                        கவிதா ராவ் எழுத்தாளர் இவர் லேடி டாக்டர்ஸ் தி அன்டோல்ட் ஸ்டோரிஸ் ஆப் இந்தியாஸ் ஃபர்ஸ்ட் வுமன் இன் மெடிசின் என்ற நூலை எழுதியுள்ளார் . இதில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக மாறிய ருக்மாபாய் ராவத் என்ற பெண்மணியைப் பற்றி பேசியுள்ளார் . இவர் சிறுவயதில் குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட்டு பிறகு அத்திருமணத்தை விட்டு விலகி மருத்துவராக சேவை செய்து வந்தவர் .      நீங்கள் லேடி டாக்டர்ஸ் என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தது அங்கத நோக்கத்திற்கானதா ? நான் இந்த லேடி டாக்டர் வார்த்தையை 1870 ஆம் ஆண்டு வெளியான பிரிட்டிஷ் மருத்துவ நூலில் இருந்து எடுத்தேன் . இதில் எந்த அங்கதமும் , கிண்டலும் இல்லை . பெண்களை தனியாக இப்படித்தான் அழைத்தனர் . ஆங்கிலேயர் காலத்தில் மருத்துவம் படித்த பெண்களை எப்படி பார்த்தனர் ? காதம்பரி கங்குலியை தேவடியா என்று அழைத்தனர் . ருக்மாபாயை திருடி , கொலைகாரி என்று அழைத்தனர் . ஹைமாபாதி சென் தனது மருத்துவ திறமைக்கு தங்கப்பதக்கம் வென்றபோது அவரை கொலை செய்வதற்கான மிரட்டல்கள் வந்தன . மேரி பூனன் லூகோஸ் தனது மருத்துவப்படிப்பை மேல்நாட்டில் படித்தபோது