பெண் மருத்துவர் கங்குலி பாயை மக்கள் தேவடியா என்று அழைத்தனர்! - எழுத்தாளர் கவிதா ராவ்

 

 

 

 

 

 

 

Dr. Anandibai Gopalrao Joshi - Tale of first Woman doctor ...

 

 

 

 

 

கவிதா ராவ்

எழுத்தாளர்


Abused, questioned, beaten, but the first female doctors ...

இவர் லேடி டாக்டர்ஸ் தி அன்டோல்ட் ஸ்டோரிஸ் ஆப் இந்தியாஸ் ஃபர்ஸ்ட் வுமன் இன் மெடிசின் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக மாறிய ருக்மாபாய் ராவத் என்ற பெண்மணியைப் பற்றி பேசியுள்ளார். இவர் சிறுவயதில் குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட்டு பிறகு அத்திருமணத்தை விட்டு விலகி மருத்துவராக சேவை செய்து வந்தவர்

 

 

Vedams eBooks

நீங்கள் லேடி டாக்டர்ஸ் என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தது அங்கத நோக்கத்திற்கானதா?


நான் இந்த லேடி டாக்டர் வார்த்தையை 1870ஆம் ஆண்டு வெளியான பிரிட்டிஷ் மருத்துவ நூலில் இருந்து எடுத்தேன்.இதில் எந்த அங்கதமும், கிண்டலும் இல்லை. பெண்களை தனியாக இப்படித்தான் அழைத்தனர்.


ஆங்கிலேயர் காலத்தில் மருத்துவம் படித்த பெண்களை எப்படி பார்த்தனர்?


காதம்பரி கங்குலியை தேவடியா என்று அழைத்தனர். ருக்மாபாயை திருடி, கொலைகாரி என்று அழைத்தனர். ஹைமாபாதி சென் தனது மருத்துவ திறமைக்கு தங்கப்பதக்கம் வென்றபோது அவரை கொலை செய்வதற்கான மிரட்டல்கள் வந்தன. மேரி பூனன் லூகோஸ் தனது மருத்துவப்படிப்பை மேல்நாட்டில் படித்தபோது அதனை விமர்சித்துப் பேசினார்கள். இந்திய பழக்கங்களை அவர் பழகவேண்டுமென கண்டித்தனர்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறு இந்திய பெண் மருத்துவர்களைப் பற்றி உங்களது நூலில் எழுதப்பட்டுள்ளது. இதில் உங்களைப் பாதிக்க கதை எது?


ருக்மாபாய் ராவத்தான். இவர் தனது குழந்தை பருவத்தில் திருமண உறவுக்குள் வந்துவிட்டார். பிறகு அதனை விலக்கிக்கொள்ள நீதிமன்றப் போராட்டம் நடத்தினார். பிறகுதான் இங்கிலாந்திற்கு படிக்கச்சென்றார். பிறகு ராஜ்கோட், சூரத்தில் மருத்துவராக பணிபுரிந்தார். இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பலவற்றையும் உங்களால் நம்பவே முடியாது.



இதில் ஆண்களின் ஆதரவு இருந்ததா?


இப்போது மேலே கூறிய அனைத்து பெண்களின் படிப்புக்கும் அவர்களது அப்பாக்கள் ஆதரவளித்தனர். இவர்களின் கணவர்கள் சிலசமயம் ஆதரவளித்தனர். அல்லது தொந்தரவுகளை தந்தனர். ஆனந்திபாயின் கணவர், மேற்படிப்புக்கு உதவினாலும் கூட வீட்டில் அவரை அடித்து உதைத்தார். ஹைமாபதியின் கணவர், அவர் மருத்துவராவதைத் தடுக்கவில்லை. மனைவி சம்பாதித்த அனைத்தையும் கணவர் எடுத்துக்கொண்டு சில சந்தர்ப்பங்களில் மனைவியை கொடுமைப்படுத்தினார். காதம்பரி, மேரி பூனன் ஆகியோரை கணவர்கள் ஆதரித்தனர். பெரும்பாலும் இவர்களை கொடுமைப்படுத்தியவர்கள் அம்மாக்களும், அவர்களைச் சேர்ந்த பெண் உறவினர்களும்தான். பெண்களின் படிப்பை உருக்குலைக்கும்படி நடந்துகொண்டனர்.


வெளிநாட்டில் கல்வி கற்க பெண்களுக்கு இந்தியாவில் ஆதரவு கிடைத்ததா?


காதம்பரி இங்கிலாந்தில் சென்று படித்தார். இதற்கு முக்கியமான காரணம், இந்திய கல்வியை மக்ககள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ருக்மாபாய் ஆடு ஒன்றை தனது மருத்துவமனையில் வைத்து அறுவைசிகிச்சை செய்து குட்டியை வெளியே எடுத்து காண்பித்தார். இதன்மூலம் அங்கு பிரசவம் பார்க்கப்படும் என்பதை மக்களுக்கு புரியவைத்தார். மேரி பூனன், திருவனந்தப்புரம் ராணிக்கு பிரசவம் பார்த்தபிறகுதான் மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை வந்தது.


பெண்கள் கோவிட் -19 காலத்தில் வாழ்ந்திருந்தால் என்ன விஷயத்தை நமக்கு சொல்லித் தந்திருப்பார்கள்?


மேரி, சின்னம்மை தடுப்பூசியை பயன்படுத்துவது பற்றி ஆதரவுக்குரல் கொடுத்தவர். இவர் 1925 அன்று தடுப்பூசியை திருவனந்தபுரம் அரசு, கட்டாயமல்ல என்று கூறியதை எதிர்த்தார். இன்று கோவிட் காலத்திலும் அவர் இந்தமுறையில் பேசியிருக்க அதிக வாய்ப்புள்ளது.


பெண் மருத்துவர்களின் டைரிகள், நினைவுக்குறிப்புகளை படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றியது?


அந்தக்காலத்திலேயே பெண் மருத்துவர்களின் சிந்தனை எந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதுதான் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆனந்திபாய் குடும்ப பெண்மணியாக இருந்தாலும் கூட கடலைக் கடந்து செல்ல துணிச்சல் கொண்டிருந்தார். அன்றைய நிலையில் பெண்கள் முழுக்க கணவர்களை மட்டுமே சார்ந்திருந்தனர். அவர் அப்போதே வாழ்க்கை ஏன் இப்படியிருக்கிறது? இன்னொருவரை சார்ந்து வாழ்வது சரியா? என யோசித்திருக்கிறார்.


பல்வேறு சிக்கல்களுக்கு இடையிலும் இவர்களின் நகைச்சுவை குறையவில்லை அல்லவா?


ஹைமதாபாய் தனது கையாலாகாத கணவர் பற்றி அங்கதமாக எழுதியுள்ளார். அவரது கணவர் வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வரும்போது, ஆண்களுக்கான நோக்கமே ஆன்மிகத்தில் உயர்வு பெறுவதுதான் என்று பேசுவாராம். அப்போது வயது முதிர்ந்த பெண்மணி அவரிடம் அப்படியென்றால் அதை நோக்கி போகாமல் எதற்கு திருமணம் செய்துகொண்டாய் என கேட்டாவிட்டாராம்.


பெண் மருத்துவர்கள் குடும்ப வாழ்க்கையை எப்படி சமாளித்தார்கள்?


கஷ்டம்தான். எந்த உதவியும் கிடைக்காத நிலையில் பெண் மருத்துவர்கள் தங்கள் பணிகளை செய்து வந்தனர். முத்துலட்சுமி ரெட்டி கூட இதில் பாதிக்கப்பட்டவர்தான். இதனால்தான் ஒருகட்டத்தில் பெண் மருத்துவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் தங்களுடைய வேலைகளை சரியாக செய்யமுடியும் என எழுதினார்.


நூலில் உள்ள ஆறு பேரும் பெண்மைய வாதிகள் என்று கூறலாமா?


கண்டிப்பாக. இந்த ஆறுபேருமே ஆண்களுக்கு நிகரான திறமை கொண்டவர்கள் பெண்கள் என உறுதியாக நம்பியவர்கள். வேலைக்கு பொருத்தமான சம்பளம் என்பதை இவர்களில் அனைவருமே உறுதியாக நம்பியவர்கள். அதற்காக போராடியவர்கள்தான். ஹைமதாபாய், ஆண்களை விட அவருக்கு குறைவான சம்பளம் கொடுப்பதை எதிர்த்து கோபமாக எழுதியுள்ளார். ருக்மாபாய், திருணம் எப்படி ஆண்களுக்கு பல்வேறு பயன்களை கொடுப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார். இவர்கள் பேசிய பெண்ணியம் என்பது அன்றைக்கும் ஏன் இன்றைக்கும் கூட பெரிய விஷயங்களாகவே உள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா


ஷர்மிளா கணேசன் ராம்


 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்