கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களின் கையிலிருந்து அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விட்டது! அமர்த்தியாசென்

 








அமர்த்தியா சென்

பொருளாதார வல்லுநர்

பெருந்தொற்றுகாலம் உங்களது கல்வி கற்பித்தலை எப்படி பாதித்துள்ளது?

நான் நேரடியாக மாணவர்களுடன் உரையாடி பாடம் கற்றுத்தருவதை மட்டுமே விரும்புகிறேன். ஆனால் பெருந்தொற்று காரணமாக அனைத்தும் ஜூமில்தான் நடைபெறுகிறது. இதனால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது  என்று தெரியவில்லை. இப்போது நான மாசாசூசெட்ஸ் வீட்டிலேயே தங்கும்படி ஆகிவிட்டது. சாந்தி நிகேதனிலுள்ள எனது சிறிய வீட்டிற்கு நான் செல்ல விரும்புகிறேன். 

உங்களது நூலில் இளமைக்காலத்தில் நீங்கள் செய்த பயணம், பார்த்த ஆறுகள் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். அறிவுப்பூர்வமான பயணமாக இக்காலகட்டம் அமைந்ததா?

சாந்தி நிகேதன் எப்போதும் அமைதியாக இருக்கும். எனது ஆளுமைக்கு அது உதவியது. அங்கு மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்கினார்கள். தேர்வில் முன்னணியில் வரவேண்டும் என்பது முக்கியமல்ல. டாகாவில் உள்ள செயின்ட் கிரிகோரி பள்ளியில் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற ஊக்குவித்தனர். எனக்கு நான் படித்த இரண்டு பள்ளிகளுமே பிடிக்கும்தான் என்றாலும் சாந்தி நிகேதன் கொடுத்த சுதந்திரம் உலகை அறிய உதவியது. 

அங்குள்ள நூலகத்தில் நான் ஏராளமான நூல்களை படித்தேன். இவை பெரும்பாலும் எனது பாடத்திட்டம் சாராதவை. இதன்பிறகு நான் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றபோது சுதந்திரமான கல்விமுறையால் நான் கற்றவை எனக்கு உதவின என்பதை அறிந்தேன். 

சாந்தி நிகேதனில்  துணைவேந்தர் பாராமிலிட்டரி படையை பாதுகாப்பிற்கு வேண்டுமென கேட்டிருக்கிறார். உண்மையில் அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது?

கொல்கத்தா என்ற மாநிலம் பிற மாநிலங்களிலிருந்து தனித்தது கிடையாது. பரிசாக மக்களுக்கு கிடைத்தது என்று கூற முடியாது. நான் படித்தபோது பல்கலைக்கழகம் ஆசிரியர்களின் கையில் இருந்தது. இப்போது அது அரசியல்வாதிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது. பிரதமர்தான் அதன் வேந்தராக உள்ளார். கல்வி நிறுவனத்தின் அடிப்படை விதிகளுக்கு மாறாக அவர் செயல்படாமல் இருந்தால் சரிதான். 

சீரழிவு என்பது கல்வி நிறுவனம் அரசு அதிகாரிகளின் கைகளுக்கு செல்லும்போது தொடங்கிவிடுகிறது. இதனை தவிர்க்க முடியாது. நாலந்தா பல்கலைக்க்கழகம் கூட இப்படித்தான் மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதனை தொடங்குவதற்கு உள்ளூர் மக்களே விரும்பினர். ஆனால் அதிகாரம் அரசின் கைகளுக்கு சென்றுவிட்டது. இனி அரசு என்ன செய்யுமோ அதை செய்யும். 

ஸ்டேன்சாமி விவகாரத்தில் நீதித்துறை தோல்வியடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

உங்களது கேள்விக்கு நான் ஆமாம் என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. உதவி தேவைப்படும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தவர் ஸ்டேன்சாமி. அவர் மீது வழக்கு போட்டு உதவிகளை செய்யவிடாமல் தடுக்க அவர் இறந்துபோய்விட்டார். நிச்சயம் இதில் உள்ள நீதித்துறையின் தவறு பற்றி அரசு பேசியாகவேண்டும். 

இந்தியாவைப் பார்க்கும்போது உங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய மூன்று விஷயங்களை சொல்லுங்கள்?

என்ன மூன்று விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்லுகிறீர்கள்? நான் பதினேழு அல்லது இருப்பத்தைந்து அல்லது முப்பதைந்து விஷயங்களைக் கூறுவேனே? வறுமை, சுதந்திரமான பேச்சு, அதிகாரத்தின் முன் தைரியமாக நிற்பது, பாகுபாட்டிற்கு எதிராக போராடுவது ஆகியவற்றை செய்யவேண்டும். இந்தியாவில் நாம் போராடி பெறுவதற்கான ஏராளமான பிரச்னைகள் உள்ளன. நான் இதற்காக எனது முழுசக்தியையும் பயன்படுத்த தயாராக இருக்கிறேன். 

இந்தியன் எக்ஸ்பிரஸ்

வந்திதா மிஸ்ரா










கருத்துகள்