மருத்துவத்துறையில் இனவெறி அரசியல் உண்டு! - மலோன் முக்வெண்டே - மருத்துவ மாணவர்
மலோன் முக்வெண்டே
இருபத்தொரு வயதான மலோன் முக்வெண்டே, லண்டனில் மருத்துவம் படிக்க சேர்ந்தார். அங்கு அவருக்கு மருத்துவ ஆராய்ச்சிக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே வெள்ளையர்களைப் பற்றியதே. இதில் மிகவும் குறைவாகவே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், பழுப்பு நிறத்தவர்கள் இருந்தனர். இவர்களை கருத்தில் கொள்ளாமல் எப்படி நோய்களைப் பற்றிய முழுமையான முடிவுக்கு வருவது என்று நினைத்த மலோன், இதற்காக நூல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இணையத்தில் வலைத்தளம் ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.
மைண்ட் தி கேப் என்ற முயற்சியைப் பற்றி கூறுங்கள்.
எங்கள் கல்லூரியில் நாங்கள் தோலில் ஏற்படும் நோய்களைப் பற்றி படித்தபோது கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே வெள்ளை இனத்தவர்களுடையது. எனக்கு அப்போது தோன்றிய கேள்வி, பிற இனத்தவர்களுக்கு இந்த நோய் மாறுபடுமே, அவர்களுக்கும் இதேபோல இருக்குமா என்பதுதான். இக்கேள்வியை ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்களுக்கு்ம் பதில் தெரியவில்லை. எனவே ஆசிரியர்கள் சிலரின் உதவியுடன் இணைந்து கிடைத்த புகைப்படங்களை இணைத்து கருப்பு நிறத்தவர்களின் தோலின் நிறத்தை தொகுத்து மைண்ட் தி கேப் நூலை உருவாக்கினோம்.
வெள்ளை இனத்தவர்களை ஆதாரமாக பயன்படுத்துகிறார்கள் என்றால் கருப்பினத்தவர்களை புறக்கணிக்கிறார்கள்தானே ?
நவீன காலத்திலும் காலனிய மனோபாவம் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதனால்தான் மருத்துவத்துறையில் குறிப்பாக கருப்பினத்தவர்களின் பகுதியில் கூட வெள்ளையர்களின் நோய்க்குறிப்புகளை, ஆதாரங்களை பயன்படுத்துகிறார்கள். எனது நூல் வெளியானபோது, ஜிம்பாவேயில் இருந்து மாணவர் ஒருவர் கூட எனது கருத்தை உறுதிப்படுத்தினார்.
எனது குழந்தைகள் பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள். எத்தியோப்பியாவிலிருந்து எனது மகள் ஸகாராவைத் தத்தெடுத்தேன். அவளுக்கு தோலில் பிரச்னை வந்தபோது, அதற்கு அவளது தோல் கருப்பிலிருந்து ரோஸ் நிறத்தில் மாறிவிட்டது என்று செவிலியர் கூறினார். வெள்ளையர்கள் தவிர வேறு இனத்தவரின் நிறமே எடுத்துக்காட்டுக்கு இல்லை என அப்போதுதான் தெரிந்தது
உண்மைதான். ஒட்டுமொத்த மருத்துவத்துறையே வெள்ளையர்களின் நிறத்தைக் கொண்டுதான் இயங்கி வருகிறது. அதனை அவர்கள் இத்தனைக காலமாக பிரச்னைகுரியது என அடையாளம் கண்டுகொள்ளாமல் இயங்கி வந்திருக்கிறார்கள். மருத்துவத்துறையின் கலாசாரம், வாழ்க்கை என்பது சிக்கலுக்குள்ளாகி வருகிறது.
இப்போது நீங்கள் அதனை ஆன்லைன் தளமாக மாற்றியிருக்கிறீர்கள். அதற்கு ஹூடனாபோ என பெயர் வைத்திருப்பது ஏன்?
ஹூடனாபோ என்பது எனது மொழியான சோனாவில் மொழிபெயர்த்தால் ஆரோக்கியம் என்று பொருள் வரும். இந்த தளத்தில் உலகம் முழுக்க இருக்கும் மக்கள் பங்கேற்று தங்கள் பிரச்னைகளை விவாதிக்க முடியும்.
இதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?
மருத்துவம் தொடர்பான அறிவை மக்கள் பெறவேண்டும். ஆன்லைன் தளம் என்பதால் ஒருவர் எளிதாக தொடர்பு கொண்டு தங்களது பிரச்னைகளை கூற முடியும். அதற்கான தீர்வுகளை பெறலாம். இதனால் துறையில் உள்ள பல்வேறு வேறுபாடுகளை எளிதாக களைய முடியும் என்ற நினைக்கிறேன்.
இங்கு தோலின் நிறத்தை விட முக்கியமான பிரச்னைகள் இருக்கின்றனவே?
அதுதான் மருத்துவத்துறையின் அரசியல். அவர்கள் தங்களது நூல்களில் இருபத்தைந்து வயதான 70 கிலோ எடை கொண்டவர் என ஆய்வுகளை செய்திருப்பார்கள். இந்த வரையறைக்குள் வராதவர்களை நோய் அல்லது குறைபாடு கொண்டவர்கள் என வரையறுப்பார்கள். மருத்துவம் என்பது ஆதாரத்தை அடிப்படையாக கொண்டதுதான். ஆனால் அந்த ஆதாரம் எங்கிருந்து பெறப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். பெரும்பாலான மருத்துவ ஆய்வுகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை அடிப்படையாக கொண்டுள்ளன.
இதனை எப்படி மாற்றி கணக்கிடுவது?
தங்களது ஆரோக்கியம் பற்றிய கேள்விகளை மக்கள்தான் கேட்கவேண்டும். நான் இதற்கு என்னிடம் தீர்வு இருப்பதாக கூறமாட்டேன். இனம் ரீதியாக, வருமான ரீதியாக மக்களை பிரித்து அவர்களை ஆய்வுகளுக்கு உட்படுத்தினால்தான் சரியான தகவல்களைப் பெற முடியும் என்று கூறமாட்டேன். தனிப்பட்ட மனிதர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்
டைம்
ஆஞ்சலினா ஜோலி
https://time.com/6074742/angelina-jolie-malone-mukwende-hutano-mind-the-gap/
http://hutano.co/cgi-sys/suspendedpage.cgi
கருத்துகள்
கருத்துரையிடுக