போராட்டங்களை நடத்திய சாதனைப் பெண்கள்!
சாதனைப் பெண்கள்
ஒலிம்பே டி காகெஸ்
பாகுபாட்டிற்கு எதிராக போராடியவர்
1748ஆம் ஆண்டு பிரான்சின் தென்மேற்கு பகுதியில் பிறந்தவர். பாரிஸ் நகருக்கு 22 வயதில் இடம்பெயர்ந்தார். சலூன்களில் கூடும் பெண்களை ஒன்றாக திரட்டி பல்வேறு அரசியல் செய்திகளை கூறத் தொடங்கினார்.இ வற்றை மையமாகவே கொண்டு அரசியல் நாடகங்களை எழுதினார்.
இவருடைய இயற்பெயர், மேரி கௌஸ். எழுதுவதற்குத்தான் மேலேயுள்ள ஒலிம்பே டி காகஸ். புனைப்பெயரை பெற்றோர் பெயர்களை இணைத்து வைத்துக்கொண்டார். அரசியல் ரீதியான விமர்சனங்கள் 1793ஆம் ஆண்டு கில்லட்டில் இவரது தலையை நறுக்கும் நிலையை ஏற்படுத்தியது. 1791ஆம் ஆண்டு பெண்களுக்கு சம உரிமை சுதந்திரம் வழங்குவதற்கான ஒலிம்பே எழுதிய ஆவணம் முக்கியமானது. 1789ஆம் ஆண்டே பிரான்ஸ் மன்னரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான புரட்சி தொடங்கிவிட்டது.
ஒலிம்பே எழுதியதுதான் பெண்களுக்கான முதல் சுதந்திர உரிமைகளுக்கான அறிக்கை. அதற்குப் பிறகுதான் ஆங்கில எழுத்தாளர் மேரி வோல்ஸ்டோன்கிராப்ட் அடுத்த அறிக்கையை எழுதி வெளியிட்டார்.
எலிசபெத் கேடி ஸ்டாண்டன்
அமெரிக்க செயல்பாட்டாளர்.
அமெரிக்காவில் பெண்ணுரிமைகளை அறிமுகப்படுத்தியவர் இவரே.
எலிசபெத், டிக்ளரேஷன் ஆப் சென்டிமென்ட் என்ற நூலை எழுதினார். இதில் கூறப்பட்ட கருத்துகள் அடிப்படையில்தான் அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமை கிடைத்தது. 1920ஆம் ஆண்டு பெண்களுக்கான வாக்குரிமை உறுதிசெய்யப்ப்பட்டது.
1815ஆம் ஆண்டு சமூக செயல்பாட்டாளர் எலிசபெத் கேடி ஸ்டான்டன் பிறந்தார். அன்றைக்கு பெண்களுக்கு கல்வியா என பேசிக்கொண்டிருந்தபோதும், எலிசபெத் முழுமையான கல்வியைக் கற்றார். மது விலக்கு, அடிமை ஒழிப்பு ஆகியவற்றை பேசிய அமைப்புகள், இயக்கங்களுடன் தன்னை இணைத்துக்கொண்டார். 1848ஆம் ஆண்டு டிக்ளரேஷன் ஆப் சென்டிமெண்ட் என்ற பெண்களுக்கான உரிமை பற்றிய நூலை எழுதினார்.
தேசிய பெண்களுக்கான அமைப்பின் தலைவராக இருபது ஆண்டுகள் இருந்தார்.
அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் 1861-1865 காலகட்டங்களில் நடைபெற்றது. இதன் முடிவில் கூட கருப்பினத்தவர்களுக்கு வாக்குரிமையைத்தான் பேசினார்கள். பெண்கள் விஷயத்தில் கள்ள மௌனம் சாதித்தனர். எலிசபெத், தனது குரல் மூலம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பல்வேறு போராட்டங்களை நடத்தினார். பெண்கள் அனைவரும் இணைந்து இதற்கென 1890இல் அமைப்பைத் தொடங்கினர்.
ஹாரியட் டப்மன்
சுதந்திரப் போராட்டக்காரர்
அமெரிக்காவில் நடைபெற்ற அநீதி, இனவெறி, பாகுபாட்டிற்கு எதிராக நீண்ட போராட்டத்தை நடத்தியவர் ஹாரியட்.
அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள பண்ணையில் பிறக்கும்போதே அடிமையாக பிறந்தார் ஹாரியட். 1820இல் பிறந்தவர், அடிமை வாழ்க்கையிலிருந்து தப்பி அடிமை பிலடெல்பியாவுக்கு சென்றார். இந்த மாநிலத்தில் அடிமை முறை, 1849ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டது. ரகசியமான பாதைகள், பாதுகாப்பான வீடுகள் என அடிமை முறைக்கு எதிரான வீரர்கள் ஆகியோரின் உதவியுடன் பயணித்தார். இதனை அண்டர்கிரவுண்ட் ரயில்ரோடு என்று கூறுகின்றனர்.
ஹாரியட், தான் விடுதலையானவு்டன் தன்னுடைய மக்களையும் மீட்கும் முயற்சியில் மறக்காமல் இறங்கினார். தனது பெற்றோர் உட்பட பல நூறு பேர்களை தெற்கிலிருந்து வடக்குப்புற மாநிலங்களுக்கு கொண்டு வந்தார். கனடாவிலிருந்து கூட அடிமைகளை மீட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் அடிமை முறை தொடங்கியது 1619ஆம் ஆண்டு. இங்கு, வர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனில்தான் அடிமைகளை கப்பலில் கொண்டு வந்து இறக்கி வியாபாரத்தை தொடங்கினர்.
இங்கிலாந்தில் அடிமை வியாபார முறை 1807ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டது. இதற்கு அரசியல்வாதிகளின் பிரசாரம்தான் முக்கியமான காரணம். அதிலும் வில்லியம் வில்பர்போர்ஸ் அடிமை முறையை விமர்சித்து எதிர்த்து போராடிய முக்கியமான அரசியல்வாதி.
ஹாரியட் படிக்க எழுத தெரியாதவர் என்றாலும் கூட தனது வாழ்க்கையை எப்படி பிறருக்கு எடுத்துச்சொல்லவேண்டும் என்று தெரிந்தவர். போராட்டங்களையும் கூட தெளிவாக வழிநடத்தினார்.
1861ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியவுடன் ஹாரியட், உளவாளியாகவும், செவிலியராகவும் வேலை செய்தார். 300 பேர்களைக் கொண்ட படையை தெற்கு கரோலினா பகுதியில் ஊடுருவச்செய்து வழிகாட்டி 800 அடிமைகளை காப்பாற்றினார்.
1865ஆம் ஆண்டு அடிமை முறை, அமெரிக்காவில் ஒழிக்கப்பட்டது. பிறகு, முதியோருக்கான இல்லம் ஒன்றை அமைத்தார். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமைக்காகவும் போராட்டங்களை அமைத்துள்ளார். தனது 93 வயதில் கட்டிய இல்லத்தில் காலமானார்.
வறுமை, அடிமைமுறை என தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களை சந்தித்தாலும் பிற மக்களின அடிமைமுறை ஒழிப்பிற்கு பாடுபட்ட பெண்மணி.
ஹாரியட் செய்த செயல்களின் விளைவாக இவரை மோசஸ் என்ற பெயரில் அழைத்தனர். இவர் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கான வாக்குரிமை 21 என வயது நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான வாக்குரிமை சட்டத்தை அமெரிக்க அதிபர் லிண்டன் பி ஜான்சன் அமல்படுத்தினார். 1965ஆம் ஆண்டு இதனை அமலாக்கும்போது கூடவே சட்ட உரிமைகளுக்கான போராளி மார்ட்டின் லூதர் கிங்கும் அருகில் இருந்தார்.
லூயிஸ் மிட்செல்
புரட்சி போராட்டக்காரர்
1888ஆம் ஆண்டு லூயிஸ் மிட்செலை வலதுசாரி போராட்டக்காரர் ஒருவர் துப்பாக்கியால் தலையில் சுட்டார். அதிலும் தப்பி பிழைத்தவர் லூயிஸ்.
புரட்சித்தலைவி
1871ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூன் போராட்டத்தில் பிரெஞ்சு படைகளை எதிர்த்து போரிட்ட போரில் செவிலியராக பணியாற்றினார். அப்போது பிரெஞ்சு அரசு ப்ரஷ்ஷியாவிடம் போரிட்டு தோற்றிருந்தது. இதனால் அரசுக்கு எதிராக அதிருப்தி பெருகி, புரட்சி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியிருந்தது. இதற்கு எதிராக அரசு அங்கு அதிகாரத்தை நிலைநாட்ட முயன்று தோற்றது.
புரட்சி அரசு 72 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. அதற்குபிறகு அதனை பிரெஞ்சு அரசு தூக்கியெறிந்தது. புரட்சிக்கு உதவியதால், மிட்செலுக்கு தண்டனையாக நாடுகடத்தல் விதிக்கப்பட்டது. நியூ கடலோனியா தீவில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவர் மீண்டும் புரட்சிக்கு முயன்றார். இதனால் 74 வயதில் இறக்கும்வரை பலமுறை சிறைதண்டனை விதிக்கப்பட்டு தண்டனையை அனுபவிக்க நேரிட்டது.
சரியோ தவறோ தான் கொண்ட நம்பிக்கைக்கு ஆதரவாக போராடியவர் என்பதால் மிட்செலுக்கும் வரலாற்றில் முக்கியமான இடமுண்டு.
பெர்த்தா வான் சட்னெர்
எழுத்தாளர்
ஆஸ்திரியாவின் வியன்னாவில் 1843ஆம் ஆண்டு பிறந்தவர். பாரோன் ஆர்தர் வான் சட்னெர் என்பவரை காதலித்தார் குடும்பம் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் பிரான்சின் பாரிசுக்கு வந்துவிட்டார். ஸ்வீடனைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ஆர்தர் நோபலிடம் செயலாளராக வேலை செய்தார். பிறகு வியன்னாவுக்கு திரும்பியவர், காதலர் வான் சட்னெரிருடன் ரஷ்யாவுக்கு சென்றார்.
1899ஆம் ஆண்டு ஹாக் அமைதி மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட முதல் பெண்மணி இவர்தான்.
ரஷ்ய துருக்கிப் போர் நடைபெற்ற பிறகு, அதன் பின்விளைவுகளைப் பார்த்த பெர்த்தா லே டௌன் யுவர் ஆர்ம்ஸ் என்ற போருக்கு எதிரான நாவலை எழுதினார். அமைதி, போருக்கு எதிரான கருத்துகள் என உலகம் முழுக்க பயணம் செய்துள்ளார். இவரது பணிகளைப் பார்த்தும் எழுதிய நூலுக்காகவும் 1905ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இன்றைக்கு ஐ.நாவின் பெரும்பான்மையான மனிதநேய பணிகள் அனைத்துக்கும் தொடக்கம் பெர்த்தாவின் அமைதிக்கான செயல்பாடுகளும், முயற்சிகளும்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக