இடுகைகள்

விளையாட்டு. குற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதில் பெருகும் ஆவேசத்தை, கோபத்தை மடைமாற்ற முடியுமா?

படம்
  ஆவேச உள்ளுணர்வு என்பதை நேர்மறையாக எடுத்துக்கொள்ளலாம். அதை விளையாட்டு மூலம் எளிதாக வெளிப்படுத்தலாம் என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த இடத்திலும் அப்படி வெளிப்படுத்துவது, விதியாக இல்லாதபோதும் வரவேற்கப்படுவதில்லை. தன் கோபத்தை, ஆவேசத்தை வெளிப்படுத்தும் வீரர் ஊடகங்களில் மோசமான முன்னுதாரணமாக காட்டப்படுகிறார். பரிமாண வளர்ச்சிப்படி பார்த்தால் ஆவேச உள்ளுணர்வு என்பதை உயிர்கள் பிழைப்பதற்கான வாசலாக பார்க்கலாம். வெல்லும் வெறி இல்லாமல் நாம் போர், நோய்களைத் தாண்டி பிழைத்து வந்திருக்க முடியாது. ஒருவகையில் உயிர்களை பிழைக்க வைப்பதற்கான ஆற்றலாக ஆவேசத்தைக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இந்த உணர்வு உண்டு. உயிருக்கு ஆபத்து வரும்போது யாரும் பிறருக்கு செல்லம் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவே நினைப்பார்கள்.   லோரன்ஸ் என்ற உளவியல் ஆய்வாளர் மனிதர்களுக்கு ஏற்படும் ஆவேசத்தை நேர்மறையாகவே அணுகிறார். தனது கோட்பாட்டை விலங்குகளை வைத்து சோதித்து நிரூபணம் செய்தார். சிக்மண்ட் ஃப்ராய்ட், ஆவேச உணர்வை குறிப்பிட்டபடி செயலில் பயன