இடுகைகள்

காய்கறிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை தொழிலாளர்களுக்கு முழுவதுமாக கொடுத்த இளைஞர்!

படம்
            காய்கறிகளைத் தொழிலாளர்களுக்கு கொடுத்த இளைஞர் ! கேரள மாநிலம் அண்டை மாநிலங்களிடமிருந்து காய்கறி , அரிசி ஆகியவற்றைப் பெறுகிறது . இதன் காரணமாக பிற மாநிலங்களில் ஏற்படும் விவசாய பாதிப்புகள் கேரள மக்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் . இம்மாநிலத்தைச் சேர்ந்த யாது எஸ் பாபு , தனது 1.5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு காய்கறிகளை விளைவித்தார் . அதனை தினக்கூலி தொழிலாளர்களின் உணவுக்காக வழங்கியிருக்கிறார் . இடுக்கி மாவட்டத்திலுள்ள அன்னக்கரா எனுமிடத்தில் வாழும் இருபத்தைந்து வயது இளைஞரான இவர் , இயற்கை முறையில் செயற்கை உரங்களை இடாமல் வளர்த்த காய்கறிகளை தானே முன்வந்து அன்னகோரும்மா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழியே தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார் . இவரது தந்தையும் கூட இதே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் . வாரம்தோறும் நூறு கிலோ காய்கறிகளை பறித்து உணவுக்காக தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர் . இவரது தோட்டத்தில் மிளகு , பீன்ஸ் , ஏலக்காய் , பீர்க்கை , கத்தரிக்காய் செடிகளை பயிரிட்டுள்ளார் . பனிரெண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான

உணவுத்துறையில் ரோபோக்களின் பங்கு!

படம்
  cc   உணவுத்துறையி ல் ரோபோ ! அமெரிக்காவில் பிளென்டி என்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது . இந்நிறுவனம் , வீட்டின் உள்ளறைகளில் உணவுப் பயிர்களை வளர்க்கும் தொழிலை செய்துவருகிறது . இதனை பராமரிப்பது மனிதர்கள் அல்ல ரோபோக்கள்தான் . அந்த வகையில் கொரோனா பாதிப்பால் தற்போது உணவுத்துறையில் ரோபோக்களை நிறுவனங்கள் நாடத் தொடங்கியுள்ளன . காரணம் மனிதர்களிடமிருந்து நோய்த்தொற்று எளிதாக பரவும் ஆபத்துதான் . ” மக்கள் மனிதர்களின் கைபடாத காய்கறிகளை அச்சமின்றி சாப்பிட விரும்புகிறார்கள் . காய்கறிகளை முதல் நபராக மக்கள் தாங்களே தொட்டு சாப்பிட நாங்கள் உதவுகிறோம்” என்கிறார் பிளென்டி நிறுவன இயக்குநர் மேட் பர்னார்டு . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரோபோக்கள் மூலம் தொடங்கப்பட்ட கஃபே எக்ஸ் நிறுவனம் , முதலீடு இன்றி தடுமாறியது . ஆனால் இன்று நோய்த்தொற்று காரணமாக மனிதர்கள் இல்லாத உணவகங்களுக்கு வரவேற்பு பெருகிவருகிறது . பிளென்டி போன்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இ வலைத்தளங்கள் மூலம் ஏராளமான ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளன . பீட்சா விற்கும் நிறுவனங்களும் இப்போது மனிதர்களின் கைபடாமல் பீட

எதிர்காலத்தில் உணவு எப்படியிருக்கும்? டேட்டா கார்னர்

படம்
  cc உணவு இனி எதிர்காலத்தில் நமக்கு பிடித்த உணவு என்று ஒன்றை சாப்பிட முடியாது என்றே கிடைக்கும் செய்திகள் நினைக்க வைக்கின்றன. பொதுவாக நமக்கு பிடித்த காய்கறிகளை சாப்பிடுகிறோம். இறைச்சி பிடித்திருக்கிறவர்கள் அதனை சாப்பிடுகிறார்கள். ஆனால் இனி கார்பன் வெளியீடு குறைவாக உள்ள பொருட்களை சாப்பிடச்சொல்லி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தலாம். அதனை அரசு விதிகளாக கூட மாற்றலாம். குறிப்பிட்ட விளைபொருட்களை விளைவிக்க கார்பன் வெளியீடு அதிகரிக்கிறதா என்று பார்த்து அதனை ஸ்டிக்கராக ஒட்டிக்கூட பொருட்களை விற்பார்கள். உணவகங்களில் கார்பன் வெளியீடு அதிகம் கொண்ட இறைச்சி உள்ளிட்ட உணவுகளுக்கு அதிக வரி விதிக்கப்படலாம். பிரான்சில் நடந்த யெல்லோ வெஸ்ட் போராட்டம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களுக்கு கார்பன் வரியை இம்மானுவேல் மாக்ரான் விதித்தார். நாடே போராட்டங்களால் தடுமாறிவிட்டது. அதுபோன்ற சமாச்சாரங்கள் உணவு விஷயங்களில் நடைபெறலாம். குறிப்பிட்ட பெருநிறுவனங்களின் கைகளில் விவசாய நிலங்கள் செல்லும்போது, அவர்கள் இதனை சாத்தியப்படுத்துவார்கள். அதாவது, மக்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை முடிவு செய்யும் அத

உணவு வீணாவதை தடுப்பது எப்படி?

படம்
உணவு உற்பத்தி முறைகளிலும் அதனை பயன்படுத்தும் முறைகளிலும் பெருமளவு உணவு வீணாகி வருகிறது. இதைத்தடுக்க உணவுப்பொருட்களை கவனமாக தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். வளர்ந்த வளரும் நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சதவீத மக்கள் உணவின்றி தவிக்கும்போது மற்றொரு இடத்தில் உணவுப்பொருட்கள் தேவையின்றி வீண்டிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் நமக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களின் இன்றியமையாத தன்மையை நாம் அறியாததே ஆகும். இம்முறையில் உலகெங்கும வீணாகும் உணவுப் பொருட்களிலிருந்து 3 பில்லியன் டன்கள் பசுமை இல்ல வாயு வெளியாகி உலகை வெப்பப்படுத்தி வருகிறது. அதாவது உலகில் 23 சதவீத விவசாய நிலங்களிலிருந்து பெறும் விளைபொருட்கள் பயன்படுத்தப்படாமல் வீண்டிக்கப்படுகின்றன.  மக்களின் உணவுத்தேவைக்காக விளைவிக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு காய்கறிகள் உணவுகள் வீண்டிக்கப்பட்டு வருகின்றன. இதனை எப்படி தவிர்ப்பது? அருகிலுள்ள காய்கறிகடைகளுக்கு செல்லும்போது தேவையான காய்கறிகளை மட்டும் வாங்குங்கள். உணவு தயாரிக்கும்போது எத்தனை பேர்களுக்கு என திட்டமிட்டு அதனை செய்யுங்கள். முடிந்தவரை ஒட்டுமொத்தமாக காய்கறிகளை வாங்குவதை தவிருங்க

புற்றுநோயை ஏற்படுத்துகிறதா பாரபீன்?

படம்
Livescience புற்றுநோயை ஏற்படுத்துகிறதா பாரபீன்? இன்று ஆர்கானிக் ட்ரெண்டிங்தானே மேட்டர். பலரும் சோப்பில், ஷாம்பூவிலுள்ள பாரபீன் என்ற பெயரைப் பார்த்து டரியலாகி ஆர்கானிக் சோப்பு கிடையாது என பதறி ஓடி கிரிஸ்டல் சோப்புகளாகப் பார்த்து அதிக காசு செலவு செய்து ஆரோக்கியம் காத்து வருகிறார்கள். உண்மையில் பாரபீனில் என்ன பிரச்னை. “பாரபீன்கள் பாரா ஹைட்ராக்ஸிபென்சோயிக்(PHBA)  என்ற வேதிப்பொருளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கையாகவே கேரட் மற்றும் ப்ளூபெர்ரிகளில் உள்ள வேதிப்பொருள் இது.” என்றார் அமெரிக்கன் வேதிப்பொருள் கௌன்சில் இயக்குநரான கேத்ரின். பழங்களிலுள்ள இந்த பாரபீன் எதற்கு உதவுகிறது? நம் உடலிலுள்ள அமினோ அமிலங்களை உடைப்பதற்குத்தான். பாரபீனில் மெத்தில் பாரபீன், எத்தில் பாரபீன், புரொபைல் பாரபீன், புட்டிபாரபீன், ஐசோபாரபீன், ஐசோபுட்டி பாரபீன் ஆகிய வகைகள் உண்டு. அழகுசாதனப்பொருட்களில் பாரபீன் எதற்குப் பயன்படுகிறது? அதனை பதப்படுத்தும் பயன்பாட்டிற்காகத்தான்.  நாம் சாப்பிடும், பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் 90 சதவீதம் பாரபீன் உண்டு. அமெரிக்காவின் எஃப்டிஏ சட்டப்படி லேபிளில