உணவு வீணாவதை தடுப்பது எப்படி?






Asparagus, Steak, Veal Steak, Veal, Meat, Barbecue


உணவு உற்பத்தி முறைகளிலும் அதனை பயன்படுத்தும் முறைகளிலும் பெருமளவு உணவு வீணாகி வருகிறது. இதைத்தடுக்க உணவுப்பொருட்களை கவனமாக தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

வளர்ந்த வளரும் நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சதவீத மக்கள் உணவின்றி தவிக்கும்போது மற்றொரு இடத்தில் உணவுப்பொருட்கள் தேவையின்றி வீண்டிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் நமக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களின் இன்றியமையாத தன்மையை நாம் அறியாததே ஆகும். இம்முறையில் உலகெங்கும வீணாகும் உணவுப் பொருட்களிலிருந்து 3 பில்லியன் டன்கள் பசுமை இல்ல வாயு வெளியாகி உலகை வெப்பப்படுத்தி வருகிறது. அதாவது உலகில் 23 சதவீத விவசாய நிலங்களிலிருந்து பெறும் விளைபொருட்கள் பயன்படுத்தப்படாமல் வீண்டிக்கப்படுகின்றன.

 மக்களின் உணவுத்தேவைக்காக விளைவிக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு காய்கறிகள் உணவுகள் வீண்டிக்கப்பட்டு வருகின்றன.

இதனை எப்படி தவிர்ப்பது?

அருகிலுள்ள காய்கறிகடைகளுக்கு செல்லும்போது தேவையான காய்கறிகளை மட்டும் வாங்குங்கள். உணவு தயாரிக்கும்போது எத்தனை பேர்களுக்கு என திட்டமிட்டு அதனை செய்யுங்கள். முடிந்தவரை ஒட்டுமொத்தமாக காய்கறிகளை வாங்குவதை தவிருங்கள். அப்படி வாங்கினாலும் அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்துங்கள்.

பெரும்பாலான விவசாயப் பொருட்கள் எந்த நிலையில் அதிக சேதத்தை  சந்திக்கின்றன என பலருக்கும் மனத்தில் கேள்விகள் இருக்கலாம். நிலத்திலிருந்து விளையும் பொருள், அறுவடைக்குப் பிறகு சேமிப்பு கிட்டங்கியில் சேமிக்கப்படுகிறது. இதில் ஏற்படும் குளறுபடிகளால் 92 சதவீத பொருட்கள் சேதமாகின்றன. அடுத்து இதனை பாக்கெட்டில் அடைத்து பதப்படுத்தும் இடத்தில் 84 சதவீதப் பொருட்கள் வீணாகின்றன. இப்படி செல்லும் இடத்திலும் காய்கறிகள் குறிப்பிட்ட வடிவத்தில் இல்லாமல் இருந்தால் அவற்றை வாடிக்கையாளர்கள் வாங்குவதில்லை. இப்படி 82.5 சதவீத காய்கறிகள் ஸ்வாகா ஆகின்றன.

கடைகளிலிருந்து வீட்டுக்குச் சென்று அங்கிருந்து சமைத்து பரிமாறப்படும் வகையில் 78 சதவீதமும், உணவாக சமைத்தபிறகு 67 சதவீதமும் வீணாக்கப்படுகிறது.

உணவு வீணாகிவிட்டது. அந்த உணவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தமுடியுமா? நிச்சயம் முடியும். இதனை நாம் தலைக்கு கண்டிஷனர் பயன்படுத்துவது போல மண்ணுக்கான கண்டிஷனராக பயன்படுத்தலாம். உரமாக பயன்படுத்தலாம். உணவுப்பொருட்களிலிருந்து வெளியேறும்  வாயுவை சரியான படி சேமித்தால் அதனை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த முடியும்.


காய்கறிகள் 40 சதவீதமும், இறைச்சி, மீன் வகைகள், பால் பொருட்கள் 20 சதவீதமும் வீணாகின்றன. 


நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்










பிரபலமான இடுகைகள்