மரணதேவனை வெளியே கொண்டு வர முயலும் நாஜிப்படை - கருவறையின் மர்மம்



இரும்புக் கை மாயாவி - தமிழ் காமிக்ஸ் ...
மாதிரிப்படம்

கருவறையின் மர்மம் பாகம் 1

கதை – கிறிஸ்டோப், பிலிப் திரால்ட்

ஓவியம் – ஸ்டெபனோ ரஃபேல்

தமிழில்: தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ்


1220 ஆம் ஆண்டில் பாதிரியார் புனித சிலுவையோடு வந்து குகையில் உள்ள மரணதேவனை அழிக்க நினைக்கிறார். ஆனால் பாதிரியாரைத் தவிர பிறர் அனைவருமே மரணதேவனால் இறக்கிறார்கள். அவரை வெளி உலகிற்கு அனுப்பி வைத்து அதன் மூலம் வெளியே வர நினைக்கிறது மரணதேவன். அது சாத்தியமானதா இல்லையா என்பதை திக் திக் என்ற படபடப்புடன் முடித்துவைக்கிறது கதை.

நாஜிப்படை வீரர்கள் இதில் வருகிறார்கள். அவர்களை தலைவர் காட்ஸ் வழிநடத்துகிறார். அவர்களின் சார்பில் யூதர் கெம்பர் ஆராய்ச்சி செய்ய வருகிறார். அவர்களுக்கு முன்பே பிரான்ஸைச் சேர்ந்த டெலோர்ம் அங்கு வந்துவிடுகிறார். டெலோர்மின் மனைவியை கொன்று விடுவதாக மிரட்டி அவரையும் ஆய்வு பணியில் ஈடுபட வைக்கிறது நாஜிப்படை.

அமானுஷ்ய சக்திகளை ஹிட்லர் பெறுவதற்கான இந்த செயல்பாடுகளை செய்கிறார். இதில் பல விபரீத விஷயங்கள் நடக்கின்றன. அது என்ன என்பதுதான் கதை. கதையின் ஓவியங்கள் பிரமாதமாக இருக்கின்றன.

இதில் டெலொர்மின் மனைவியின் பாத்திரம் அவ்வளவு நம்பகத்தன்மையோடு இல்லை. மனதில் நெருடிக்கொண்டே இருக்கிறது. காரணம், கதையை நகர்த்திச்செல்ல அவசியமில்லாததாக உள்ளது.

மற்றபடி கதையின் போக்கு அடுத்த பாகத்தை எதிர்பார்க்க வைக்கிறது.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்