உடல் எடை அதிகரிக்குமோ என நினைத்து பயப்படுகிறீர்களா? - அனெரெக்ஸியா நெர்வோஸா



அனரெக்ஸியா நெர்வோஸா

உடல் அதிக எடையாகிவிடுமோ என்று பயப்பட்டு சாப்பிடுவதை குறைத்துக்கொண்டே செல்லும் பிரச்னை இது. பெரும்பாலும் மாடல் பெண்கள் குறிப்பிட்ட வயதுக்கான உயரம் இருக்கவேண்டும், ஆனால் குழந்தை அல்லது சிறுமி போன்ற கை, கால்கள் இருக்கவேண்டுமென் குறைவாக சாப்பிடுவார்கள். சாப்பிட்டபிறகு அதனை வாந்தி எடுப்பார்கள். உடலில் நீர் சேராமல் இருக்க ஏராளமான வேதிப்பொருட்களை சாப்பிடுவார்கள்.

பெண்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தாங்கள் சார்ந்த தொழில், அழகு சார்ந்து யோசிப்பவர்களும், பிறரின் கேலி, கிண்டலுக்கு பயப்படுகிறவர்களும் குறைவாக சாப்பிட்டு உடலை மம்மி லெவலுக்கு கொண்டு வருகிறார்கள். இதனால் என்ன கிடைக்கிறது என்கிறீர்களா? ஒல்லியாக அழகாக இருக்கிறோம் என்ற திருப்திதான்.

அறிகுறிகள்

பிறருடன்சேர்ந்து சாப்பிட மாட்டார்கள்

உணவின் கலோரி பற்றி கணக்கு போட்டுக்கொண்டிருப்பார்கள்.

சரியாக சாப்பிடாமல் சாப்பிட்டதாக பொய் சொல்லுவார்கள்.

கண்ணாடியில் உடலைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். உடற்பயிற்சியை விடுவேனா என வெறித்தனமாக செய்து வருவார்கள்.

சமூகத்திலிருந்து சற்று தள்ளியே வாழ்வார்கள்.

உடல் பலவீனமாகும். எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள்.

உடல் எடை குறையும்.

மாதவிடாயின் ஒழுங்கு மாறும்.

குமட்டல், வாந்தி எடுப்பது, வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் இருக்கும்.

உறக்க குறைபாடு பிரச்னை இருக்கும்.

உளவியல் வல்லுநர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த அனுபவங்களைக்கேட்டு அதிலிருந்து அவர்களை மீட்கவேண்டும். குழுவாக தெரபி வகுப்புகளை நடத்தி தைரியமூட்டுவதோடு, சரிவிகித சத்துகள் அடங்கிய உணவுமுறையை இவர்கள் பின்பற்ற வேண்டும்.

 


கருத்துகள்