மனதிற்கு பிடிக்காத சூழலை வெளிப்படுத்தும் உடல்மொழி - டிக் டிஸ்ஆர்டர்

Gestures, Verbal, Language, Body
pixabay

டிக் குறைபாடுகள்

நீங்கள் உங்கள் நண்பரை எப்படி அடையாளப்படுத்துவீர்கள்? அவரிடம் உங்களுக்கு பிடித்த அல்லது அவரை மட்டுமே அடையாளப்படுத்தும் தனி அடையாளங்கள் இருக்கும். அதாவது தலையை ஆட்டுவது, கண்களை சிமிட்டுவது, குறிப்பிட்ட வார்த்தைகளை அடிக்கடி சொல்வது, கையை சுழற்றுவது, தொண்டையைச் செருமுவது, எச்சிலைத் துப்புவது என கூறலாம்.

இவற்றில் பல்வேறு செய்கைகளை ஒருவர் செய்தால் அது டூரெட் சிண்ட்ரோம் என்று அழைக்கப்பட்டது. இக்குறைபாட்டை 1884ஆம் ஆண்டு ஜார்ஜ் டே டூரெட் என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். இவற்றை செய்வது குழந்தையாக இருக்கும்போது பிரச்னையில்லை. ஆனால் பெரியவர்களான பிறகும் இதேபோன்ற செய்கைகளை செய்வது சிக்கலான குறைபாடு என்றே உளவியல் வல்லுநர்களால் அழைக்கப்படுகிறது. அம்மெடாபைன்ஸ், போதைப்பொருட்களின் பயன்பாடு டிக் குறைபாடுகளை அதிகரிக்கும்.

அறிகுறிகள்

கண்களுக்கு பின்னே எரிச்சல் இருப்பது போல தோன்றும்.

குறிப்பிட்ட தசை உள்ள இடத்தில் அரிக்கும்.

தொண்டை வறளும்

சில இடங்களில் அரிப்பு தோன்றும்.

பல்வேறு மனிதர்கள் இந்த அறிகுறிகள் தோன்றிய பிறகே கை கால்களை சுழற்றுவது, தலையை அசைப்பது, தோள்களை குலுக்குவது போன்ற செயல்பாடுகளை செய்கின்றனர். இவர்களின் உடல் சைகைகள் தொடர்வது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக பணிக்கு ஏற்புடையது அல்ல. எனவே, குறிப்பிட்ட இடத்தை ஏற்க மறுக்கும் சமயத்தில் இக்குறைபாடு உள்ளவர்களுக்கு உடலில் பல்வேறு வேறுபட்ட சைகைகள் உருவாகின்றன. எனவே அவர்களை அந்த இடத்திற்கு வரவேற்பது போன்ற விஷயங்களை செய்யலாம். மனநிலையை சமநிலைப்படுத்தும் மருந்துகளையும், டிக் சைகைகளுக்கு மாற்றான நேர்மறையான உடல்மொழியைக் கற்றுக்கொடுக்கலாம். 

 

 

 

 

கருத்துகள்