தோலைச் சுரண்டினால், தலைமுடியை பிய்த்தால் மனநலப் பிரச்னை என்றே அர்த்தம்!


ட்ரைசோட்டிலோமேனியா

தன் முகம், தலையிலுள்ள முடி அழகாக இல்லை என்று கருதி அவற்றைப்பிடுங்கிக் கொண்டு இருப்பார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள்? குயின் ஆஃப் பியூட்டி ஆவதற்குத்தான். ஆனால் இதற்கு எதிர்மறையாக முடிவே கிடைக்கிறது. அதாவது முடியை அடிக்கடி பிடித்து இழுத்து பிய்த்து போடுவதால் தலை வழுக்கையாகிறது. தோலிலும் காயம் ஏற்படுகிறது.

தங்கள் உடலில் உள்ள தலைமுடி, கை, கால், இமை, புருவம் ஆகியவற்றிலுள்ள முடியை பிடுங்குகிறார்கள். மேலும் இவற்றை வாயிலிட்டு மென்று விழிப்புணர்வற்ற நிலையில் இவற்றை விழுங்குகின்றனர். இதன்விளைவாக பாதிக்கப்படுபவர்களுக்கு வயிற்றுவலி, தலைவலி ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவர்கள் தங்கள் உடலிலுள்ள முடியோடு செல்லப் பிராணிகளையும் சும்மா விடுவதில்லை. எனவே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சரியான உளவியல் சிகிச்சை அளிப்பது அவசியம். இதுவும் ஓசிடி வகையில் சேரும். பெண்கள் இப்பாதிப்புக்கு அதிகம் உள்ளாகின்றனர்.

அறிகுறிகள்

சமூக நிகழ்ச்சிகளிலிருந்து தனியாக இருப்பார்கள்.

தினசரி பணிகளைக்கூட அக்கறையாக செய்ய மாட்டார்கள்.

அனைத்து செயல்களையும் பதற்றத்தோடு செய்வார்கள். சுயநம்பிக்கை மிக குறைவாகவே இருக்கும்.

குற்ற உணர்வும் அவமானமும் கொண்டிருப்பார்கள்.

சிகிச்சை

உளவியல் வல்லுநர் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பதற்ற உணர்வைக் குறைக்கும் பல்வேறு பயிற்சிகளை வழங்குவார்கள். இதற்காக மருந்துகளையும் பரிந்துரைப்பார்கள்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்