பெருகிவரும் பதற்றக்குறைபாடு - என்ன தீர்வு?
கிளாஸ்ட்ரோபோபியா
சிறுவயதில் பாலியல் சீண்டல்கள், சக மாணவர்களால் கேலி, கிண்டல் செய்யப்படுவது, தீவிரமாக அவமானப்படுத்தப்படுவது ஒருவருக்கு நேர்ந்திருந்தால் கிளாஸ்ட்ரோபோபியா ஏற்படும் வாய்ப்பு அதிகம். இருக்கிறது. சிறிய அறையில் அல்லது லிஃப்டில் செல்வது இவர்களை பெரிதும் கலவரப்படுத்தும். அகோராபோபியாவுக்கு எதிர்பதமான அறிகுறிகளை இவர்கள் மனதில் உருவாகும் எதிர்மறை கருத்துகளால் மெல்ல உருவாக்கிக்கொள்வார்கள். உடலில் ஆக்சிஜன் குறைவது, தான் தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொண்டது போல உணர்ந்து அடுத்தவர்களையும் பீதிக்கு உள்ளாக்குவார்கள்.
குடும்பத்தில் உறவினர்களுக்க கிளாஸ்ட்ரோபோபியா இருந்தால் அடுத்தடுத்த தலைமுறையினர் இதனால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு.
நேர்மறையான கருத்துகளை பாதிக்கப்பட்டவர்களோடு பேசினால் தீர்வு கிடைக்கும். கூடவே மனதை சமநிலைப்படுத்தும் மருந்துகளும் உதவும்.
ஜிஏடி – ஜெனரலைஸ்டு ஆன்சைட்டி டிஸ்ஆர்டர்
உலகிலுள்ள 60 சதவீத பெண்களுக்கு இந்த பதற்றக் குறைபாடு பிரச்னை உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது தெரியுமா? எந்த செயல்பாடுகளிலும் நேர்த்தி முக்கியம், அது சரியில்லை, டேபிள் நேராக இல்லை என குறைபட்டுக்கொண்டே இருக்கும் பெண்களுக்கு இப்பாதிப்பு நேருகிறது. இதன் விளைவாக இந்த வீட்டில் நான் இல்லைன்னா எதுவுமே ஒழுங்காக நடக்க மாட்டேன்கிறது என்று சிடுசிடுவென இருப்பார்கள்.
ரொம்ப பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்கள் உடல்நிலை தலைவலி, அதிகம் வியர்ப்பது, இதயத்துடிப்பு அதிகமாதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டால் உளவியல் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
மேற்சொன்ன அறிகுறிகள் பெண்களுக்கு ஆறுமாதங்களுக்கு மேலாக நீண்டால் வேறுவழியில்லை அவர்களுக்கு மருத்துவ உதவி அவசியம். நேர்மறையான கருத்துகளைச் சொல்லி அவர்களுக்கு உடற்பயிற்சிகளை சொல்லித்தர வேண்டும். குழுவாக அவர்களை பங்கேற்க செய்து பல்வேறு உளவியல் தெரபிகளை வழங்குவது சிறப்பான பலனளிக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக