மனநலனைக் காக்கும் மொபைல் ஆப்ஸ்கள்!


Calm (best mental health apps)
பிபிசி



பெருந்தொற்று காலத்தில் உடல்நலனைப் பாதுகாக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. மனநலன் பாதிப்பு உடனே வெளியே தெரியாவிட்டாலும் நமது இயல்பு, பழகும் முறை என அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. அதனை ஓரளவு சீர் செய்ய உடற்பயிற்சி, யோகா போன்றவை உதவும். இவற்றை தொடர்ச்சியாக செய்வதில்தான் பிரச்னை உள்ளது. அவற்றை நினைவுபடுத்தவும் ஏராளமான ஆப்கள் சந்தையில் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.


Calm

இந்த ஆப் தினசரி நீங்கள் இனிய இசையோடு தியானம் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு உதவுகிறது. இதற்கான இசையை நீங்கள் இதில் உள்ள பட்டியலிலிருந்து தேர்வு செய்துகொள்ளலாம். தூங்குவதற்கான நேரத்தையும் இந்த ஆப் கண்காணிக்கிறது. இனிய இசையைத் தேர்ந்தெடுத்து அதனை போஸ் ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டு நீங்கள் தூங்கலாம். காசு கொடுத்து அப்டேட் செய்தால் நிறைய வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும்.

headspace

முன்னாள் புத்த மத துறவியான ஆன்டி புத்திகாம்ப் என்பவர் இந்த ஆப்பின் துணை நிறுவனர் இதுவும் காம் என்ற மேற்சொன்ன ஆப் போலத்தான செயல்படுகிறது. தியானமும், தூக்கமும் இதன் முக்கியமான அம்சங்கள். குறிப்பிட்ட மனநிலை சார்ந்த இசை, மனநல பயிற்சிகள் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆப்பை பயன்படுத்துவது  ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. இரவில் தூங்குவதற்கான  எட்டுமணிநேர ரேடியோ வசதி இதில் புதுசு.

Moodpath

மன அழுத்தம் சார்ந்த பிரச்னைக்கு தீர்வு தரும் ஆப் இது. தினசரி ஒருநாளுக்கு மூன்று கேள்விகள் என பதினான்கு நாட்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் தரும் அடிப்படையில் உங்களை மருத்துவரிடம் செல்லலாமா, வேண்டாமா என்று ஆப் சொல்லும். பணம் கட்டினால் நிறை ய வசதிகளை நீங்கள் பயன்படுத்த முடியும். இலவசமாக மன அழுத்தம் சார்ந்த விஷயங்களை படித்து உங்களை அந்நிலையிலிருந்து மாற்றிக்கொள்ள முடியும்.

Sanvello

தியானம் செய்வதற்கான இசை, பயிற்சிகளை எளிமையாக மாற்றிக்கொள்ள முடிகிறது. தூங்குவது, சாப்பிடுவது, காபி குடிப்பது பற்றிய பழக்கங்களை தொடர்ந்து பதிவு செய்தால் உங்கள் உடல்நலம் பற்றிய வரைபடத்தை உருவாக்கிக்கொண்டு அலர்ட் ஆக முடியும்.

happify

மனநலன் சார்ந்த பிரச்னைகளை விளையாட்டுப் போக்கில் அணுகி தீர்வு காண முடியும். இந்த ஆப்பின் செயல்பாடு ஐகான் என அனைத்துமே விளையாட்டுகளில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பயன்படுத்திப் பாருங்கள். இலவசமாகவே கிடைக்கிறது.

நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்

















கருத்துகள்