காதல் கிரிக்கெட்டில் டக் அவுட் ஆகும் இளைஞனின் வாழ்க்கை - மஜிலி -தெலுங்கு




மஜிலி
சிவா நிர்வாணா
இசை - கோபி சுந்தர்
பின்னணி தமன் சாய்


கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தவனின் வாழ்க்கையில் காதல் ஒன்று நுழைகிறது. அதன் விளைவாக, அவன் கனவு துடைத்தழிக்கப்படுகிறது. அதோடு அவனை விரும்பி ஒருதலையாக காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மனைவியின் காதலையும் புரிந்துகொள்வதில்லை. அவன் தன் மனைவியின் காதலை புரிந்துகொண்டானா, இழந்த காதல் என்னவானது என்பதை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக பேசுகிற படம்தான் மஜிலி.


யுவ சாம்ராட்டின் படம். கிரிக்கெட் போட்டியின் அம்பயராக அறிமுகமாகி லஞ்சம் வாங்கிக்கொண்டு நன்றாக விளையாடும் டீம் வெற்றி பெற உதவுகிறார். அவருக்கு அதற்கு பரிசாக ஹோட்டலில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தரச்சொல்லிக் கேட்கிறார். அந்த அறையில் இருந்து அவரது நினைவுகளின் வழியாக படம் பின்னோக்கி பயணிக்கிறது.


ஆஹா


நாக சைதன்யா எப்போதும் போல கோணலாக சிரித்துக்கொண்டு படம் முழுக்க வருவார் என பயந்தோம். இந்த படத்தில் அதற்கான வாய்ப்புகளை குறைத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். ராவ் ரமேஷின் பாத்திரம் குணச்சித்திரவகையில் பிரமாதமாக மனதில் நிற்கிறது. இரண்டாவது பகுதியை முழுக்க தனதாக்கிக் கொள்வது சமந்தாவின் நடிப்பு மட்டுமே. தனது காதலை கணவர் புரிந்துகொள்வதில்லையே என மருகுவதும், பயிற்சிக்கு வந்திருக்கும் முன்னாள் காதலியின் பெண்ணுக்காகத்தான் நெருக்கமாக இருக்கிறோம் என்பதை அறிந்து துடிப்பதுமாக படத்தை பார்க்கவைக்கிறார்.


ஐயையோ


படம் பால்ய கால காதலைப் பற்றியும், அதன் அறியாமை பற்றி பேசுகிறதா அல்லது கிரிக்கெட் விளையாட முடியாத ஒருவனின் வேதனையை சொல்லுகிறதா என்பதில் தெளிவில்லை.


காதலும் அதன் விளைவுகளும்.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்