கேங்ஸ்டர் உடலில் பள்ளிச்சிறுவன், பள்ளிச்சிறுவன் உடலில் கேங்ஸ்டர் - தி ட்யூட் இன் மீ




Video + Photo] First Trailer and New Poster Released for the ...
pinterest




தி ட்யூட் இன் மீ - கொரியா

இயக்கம் - கான் ஹியோ ஜின்

எழுத்து - ஷின் ஹான் சொல், ஜோ ஜூங் பூன், காங் ஹியோ ஜின்   


கேங்ஸ்டர் ஒருவரின் ஆன்மாவும், பள்ளியில் படிக்கும் சிறுவனின் ஆன்மாவும் இடம் மாறினால் என்னாகும் என்பதுதான் கதை.

உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது சாலையில் நெருக்கடி ஆகிறது. அப்போது காரிலிருந்து வெளியே வந்து பேசிக்கொண்டிருக்கிறார் கேங்ஸ்டர். அப்போது அங்குள்ள கட்டடம் ஒன்றின் மேலிருந்து பள்ளிச்சிறுவன் கேங்ஸ்டர் மீது விழ கதை தொடங்குகிறது. எழும்போது பள்ளிச்சிறுவன் உடலில் கேங்ஸ்டர் ஆன்மா இருக்கிறது. கேங்ஸ்டர் விபத்தின் காரணத்தினால் கோமாவில் வீழ்கிறார். அந்த விபத்து தானாக நேரவில்லை என்பதை கேங்ஸ்டர் உணர்கிறார். அப்போதான் தன் காதலியை சாலையில் சந்திக்கிறார். அவரின் மகளுக்கு உதவி செய்யப்போய்தான். பள்ளிச்சிறுவன் கட்டட த்திலிருந்து  விழுந்திருப்பதை புரிந்துகொள்கிறார் கேங்ஸ்டர். அப்போது அவர் அறியாத உண்மை ஒன்று தெரிய வருகிறது. அது என்ன? பள்ளிச்சிறுவனுக்கு இருக்கும் பிரச்னைகளை எப்படி தீர்க்கிறார் கேங்ஸ்டர், அவரின் நிறுவனங்களை சூறையாட நினைக்கும் மனைவியின் செயல்பாடுகளை எப்படி தடுக்கிறார் என்பதுதான் மீதி கதை.

ஆஹா

படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். கேங்ஸ்டராக வரும் பார்க் சங் வூங் தன் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியின்மை வெளிப்படுத்தும் இறுக்கத்திலும், அடுத்தவர்களின் சொத்துக்களை ஆக்கிரமிக்க நினைக்கும் எண்ணத்திலும் அசத்துகிறார். இறுக்கமான உணர்ச்சிகளை காண்பிக்காத முகம் கணிக்க முடியாத ஆச்சரியத்தை தருகிறது. இதற்கு மாறாக, ஜூங் ஜின் யங் அழகான தோற்றத்தில் வசீகரமாக இருக்கிறார். தன் காதலியிடம் மன்னிப்பு கோரும்போது, மகளுடன் டேட்டிங் செல்வதை விட நம் காதலை சொல்லிவிடலாம் என்று பேசும்போதும் மனதை கவர்கிறார்.

படத்தில் இவருக்குதான் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். அதிலும் பின்னி எடுக்கிறார்.. இ              

 ஐயையோ

கேங்ஸ்டர் கோமாவில் இருந்து மீள்வதற்கு ஏற்படும் தாமதம், பொறுமையை சோதிக்கிறது. அவர் வேகமாக எழுந்திருந்தால் படத்தில் காமெடி இன்னும் கூடியிருக்கும். அந்த வாய்ப்பை படம் இழந்துவிட்டது.

தவறுகளை சரி செய்ய கடவுள் கொடுக்கும் இரண்டாவது சான்ஸ் !

கோமாளிமேடை டீம்

கருத்துகள்