குழந்தை பிறப்பின்போது ஏற்படும் மன அழுத்த பாதிப்பு!
குழந்தைப்பிறப்பு சார்ந்த மன அழுத்தம்
குழந்தை பிறந்த சில வாரங்களுக்கு
தாய்மார்களுக்கு இந்த வகை மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனை பிபிடி எனக்குறிப்பிடலாம்.
போஸ்ட்பார்டம் டிப்ரஷன் என மருத்துவர்கள் இதனை குறிப்பிடுகின்றனர். இதன் விளைவாக, குழந்தைகளோடு
தாய்களுக்கு தொடர்பு கொள்வதில் சிக்கல், மனச்சோர்வு, உடல் ஆற்றல் குறைவது, பெற்றோராக
இருக்க முடியாதோ என்ற எண்ணம், மனநிலை மாற்றம்
ஆகியவை ஏற்படும். இந்த மன அழுத்தம் கூடும்போது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளல்,
தற்கொலை என்றளவுக்கு கூட செல்கிறது.
உலகில் கருவுறும் 85 சதவீத
பெண்களுக்கு இந்த வகை குழந்தைபிறப்பு சார்ந்த மன அழுத்தம் ஏற்படுகிறது.
குழந்தை பிறந்த ஏழு நாட்களிலிருந்து
ஆறுமாதங்களுக்குள் ஏற்படும் மனநலன் சார்ந்த பிரச்னை போஸ்ட்பார்டம் சைகோசிஸ் எனலாம்.
இந்தப் பிரச்னை ஏற்படும் மேற்சொன்ன அறிகுறிகளோடு தூக்க குறைபாடுகள் ஏற்படும். தன்னைத்தானே
காயம் ஏற்படுத்திக்கொள்வதோடு குழந்தையையும் தாக்க முற்படுவார்கள். எனவே கணவர் மனைவியோடு
தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கவேண்டும். மனைவி, இத்தகைய மனநிலையில் இருக்கும்போது,
அவர்களுக்கு சரியான தெரபி, மன அழுத்தத்தை சமன்படுத்தும் மருந்துகளை வழங்குவது அவசியம்.
இந்த அறிகுறிகள் பொதுவாக மன அழுத்தம், பதற்றம் கொள்பவர்களுக்கு ஏற்படும் ஒன்றுதான்.
ஆனால் இதனை சரியாக புரிந்துகொள்ளாதபோது கணவர், குடும்பம், நண்பர்கள், பணியிடம் என அனைத்து
உறவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உண்டு.
அறிகுறிகள்
மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள்
அனைத்திலும் தன்னை விலக்கிக்கொள்வார்கள்.
தங்களின் உடல் குண்டாக இருப்பதாக
நினைப்பார்கள்.
கண்டதையும் நினைத்து பயந்துகொண்டே
இருப்பார்கள். சமாதானப்படுத்துவது மிக கடினமாக இருக்கும்.
குழந்தைகளை தன்னிலிருந்து
வந்தவர்களாக கருதமாட்டார்கள். இதனால் பால் கொடுக்க எடுப்பது முதலான செயல்களில் ஈடுபடுத்துவது
கடினமாக மாறும்.
குறைவாக தூங்குவார்கள் அல்லது
அதிகமாக தூங்குவார்கள்.
திடீரென எடுத்தெறிந்து பேசுவார்கள்.
இவர்களின் மனநிலயை கணிப்பது மிக கடினமாக இருக்கும்.
உடலுக்கு ஆரோக்கியமில்லாத
உணவுகளை சாப்பிடுவார்கள். தங்களின் குடும்ப உறுப்பினர்களோடு பழகுவதை தவிர்ப்பார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக