சூப்பர் ஹீரோக்களை கலாய்க்கும் செக்ஸி நாயகன்! - டெட்பூல் 1 & 2



டெட்பூல் 1 & 2

அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் கண்டபடி நக்கல் செய்து ஜாலி கேலி செய்து தன் சொந்த பழிவாங்கலை துல்லியமாக செய்பவன்தான் கேப்டன் டெட்பூல். இல்லை இப்படியே இருக்கட்டும் டெட்பூல்.

ஸ்பெஷல்ஃபோர்சில் வேலை செய்யும் வேட் வில்சனுக்கு திடீரென உடலில் புற்றுநோய் பாதிப்பு. என்ன செய்வது? அப்போதுதான் அவனுக்கு கிளப்பில் இருந்து காதலியும் செட் ஆகி இருந்தாள். பெண்கள் தினத்தை நாள் முழுக்க படுக்கையில் அவளைப் போட்டு புரட்டி எடுத்து கொண்டாடி முடித்தபோது இந்த தகவல் தெரியவருகிறது. காதலி பரிதாபமாக பார்ப்பதோடு அவளை மனைவியாக்க நினைக்கும்போது நோய் இல்லாமல் இருக்கவேண்டும். தெரிந்தவர்களிடம் இதுபற்றிய தகவல்களைச் சொல்லி சிகிச்சை எங்கு கிடைக்கும் என்று தேடும்போது, குறிப்பிட்ட கோட் போட்ட மனிதர் அவனை அணுகுகிறார். அவனை புற்றுநோய்க்கு சிகிச்சை தந்து சூப்பர் ஹீரோ ஆக்குவதாக சொல்லுகிறார். பதிலுக்கு சிறிதுகாலம் அவர்களுக்காக வேலை பார்க்க வற்புறுத்துகிறார்.

இதற்கான சிகிச்சையில்தான் வேட் வில்சனுக்கு ஓர் உண்மை புரிபடுகிறது. ஒருவரின் உடலில் உள்ள செல்களில் வீரியம் மிக்க பல்வேறு மருந்துகளை செலுத்தி அவர்களை அதீத சக்தி கொண்டவர்களாக, அடிமை வீரர்களாக மாற்றுவதுதன் அவர்களின் பணி என்பது. புற்றுநோய் சிகிச்சை என்ற பெயரில் பலரை அங்க வேறுபட்ட மருந்துகளை கொடுத்து அதீத வலிமை கொண்ட மனிதர்களாக உருவாக்கி அரசுக்கு எதிரான சட்டவிரோத காரியங்களை பிரான்சிஸ் என்பவன் செய்துகொண்டிருக்கிறான். சிகிச்சையில் இறுதியில் வேட் வில்சனின் முகம் அப்பளம் பொரித்த எண்ணெய்யை மூஞ்சியில் கொட்டியது போல  கோரமாகிவிடுகிறது. இதனால் கோபம் கொள்பவன் பிரான்சிஸின் ஆய்வகத்தை நெருப்பை வைத்து கொளுத்துகிறான். இருவரும் பரம விரோதியாக மாறுகிறார்கள். மூஞ்சி ஐ பட விக்ரம் போல ஆகிவிடுவதால் அழகான காதலி வெறுத்துவிடுவாளோ என அவளது வீட்டுக்கு போகாமலேயே இருக்கிறான். அதே நேரத்தில் அங்கு கொடுத்த மருந்துகளால் மூஞ்சி கண்றாவியாக இருந்தாலும் உடல் எந்த காயம் ஆனாலும் உடனே ஆறிவிடுகிறது. வலி என்பதே இருக்காது. எனவே பிரான்சிஸ் என்பவனைத் தேடி வேட்டையாடுவதுதான் முதல் பாகம்.

இரண்டாம் பாகத்தில் ரஸ்ஸல் என்ற சிறுவனை கெட்டவனாகாமல் காப்பாற்றுகிறார் டெட்பூல். இதற்காக எதிர்காலத்தில் இருந்து வரும் கேபிள் என்ற வீரருடன் இணைகிறார். டெட்பூல் இதற்காக எக்ஸ் போர்ஸ் என குழுவை அமைக்கிறார். ஆனால் அவர்கள் பாராசூட்டிலிருந்து இறங்கும்போதே செத்துபோகிறார்கள். ஒழுங்காக நடுரோட்டில் இறங்கி மக்களில் சிலரை கொள்ளும் டோமினோ என்ற பெண் மட்டுமே டீமில் உயிரோடு இருக்கிறாள். அவளும் டெட்பூலும் சேர்ந்து ரஸ்ஸல் என்ற சிறுவனை சென்டிமெண்ட்டாக காப்பாற்றி அவனை நல்லவனாக்குவதுதான் இரண்டாவது பாகம். 

 

ஆஹா

ரியான் ரினால்ட்ஸ் படத்தை தயாரித்து நாயகனாக நடித்திருக்கிறார். இரண்டாவது பாகத்தில் திரைக்கதையும் எழுதியிருக்கிறார். படம் முழுக்க 18 பிளஸ் வயதினருக்கானது. எனவே, ஏராளமான கெட்ட வார்த்தைகள், செக்ஸ் சைகைள் உள்ளன. ரசிக்கும்படிதான் இருக்கிறது. காதலியை காப்பாற்றும்போது கூட செக்ஸ் செய்வதை செய்து காட்டுகிறார் ஹீரோ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எக்ஸ்மேன்களை மட்டுமல்ல டேக்கன் பட லியாம் நீல்சன் வரை அத்தனை பேரையும் நக்கல் செய்து படத்தை தெலுங்கு மசாலாவாக பரிமாறியிருக்கிறார்கள். காமெடி, ஆக்சன் என்பதால் வசனங்களில் செக்ஸ் தெறித்தாலும், சண்டைக்காட்சியில் ரத்தம் காவிரி ஆறாக ஓடுகிறது.  

இரண்டாவது பாகம் முழுக்க டெட்பூல் காதலியின் நினைவால் தற்கொலை செய்துகொள்ள முயலும் காட்சிகள்தான் அதிகம். அந்த துயரத்தை மறக்க முடியாமல் அவர் மனைவியோடு அவரும் சேர்ந்துவிட முயல்கிறார். இந்த நேரத்தில் ரஸ்ஸல் என்ற சிறுவனை எக்ஸேவியர் அகாடமியில் சித்திரவதை செய்ய கொதிப்பவனை, சிறையில் தள்ளுகிறார்கள். அவன் மீது பரிதாபப்படும் சிறையில் தள்ளுகிறார்கள். ரஸ்ஸல் என்ற சிறுவனால் தன் குடும்பத்தை இழக்கும் கேபிள் எதிர்காலத்திற்கு நிகழ்காலத்திற்கு வந்து ரஸ்ஸலை கொல்ல நினைக்கிறார். இதை டெட்பூல் எக்ஸ்மேன் டோமினோவோடு இணைந்து தடுக்கிறார். அதற்குள் ரஸ்ஸல் சிறையில் உள்ள இரும்பு மண்டையனோடு சேர என்ன விளைவுகள் ஆகின்றன என்பதுதான் கதை.

பாக்கியராஜ் சூப்பர் ஹீரோவாக நடித்தால் எப்படியிருக்கும் என்று நினைத்து பார்த்தால் உங்களால் இந்தப்படத்தை ரசிக்க முடியும்.

ஜாலியாக ரசித்துப் பார்க்கும் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத சூப்பர் ஹீரோ படம்.

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்