பொது இடத்தில் பேசுவதில் தயக்கம், அளவுக்கு அதிகமான பாதுகாப்பு உணர்வு - மனநல குறைபாடுகள்
செலக்டிவ் ம்யூட்டிசம்
இந்த குறைபாடு மூன்றிலிருந்து எட்டுவயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இவர்களால் நன்றாக பேச முடியும். ஆனால் குறிப்பிட்ட பள்ளி நிகழ்ச்சிகளுக்கான மேடைகளில் பேச வைத்தாலும், பேச முடியாது என்று கூறிவிடுவார்கள். ஆனால் பிற சமயங்களில் வாய் கிழிய பேசி கொல்வார்கள்.
இந்த பிரச்னை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், கவலைகள், மற்றும் பதற்றம். மேலும் இந்த குழந்தைகளுக்கு காது கேட்பதில், பேசுவதில் பிரச்னை ஏதும் இருக்கிறதா என்பதை சோதிப்பது அவசியம். இரு மொழிகளைப் பயிலும் குழந்தைகளுக்கு பொதுவாக இப்பிரச்னை ஏற்படும். மேடையில் பேசுதவற்கான ஏறிவிடுவார்கள். ஆனால் பேசாமல் அப்படியே உறைந்து நின்றுவிடுவார்கள். யாரையும் பார்க்க மாட்டார்கள். மிக குறைவான முறை மட்டுமே பிறரது முகத்தைப் பார்ப்பார்கள்.
இவர்களுக்கான சிகிச்சை என்பது இவர்களை பேச வைப்பதுதான். இவர்கள் பேசும்போது எக்காரணம் கொண்டும் பேசு பேசு என வற்புறுத்துவது கூடாது.. அது அவர்கள் மேலும் பதற்றத்துக்கு உள்ளாக்கும்.
********************************************************
ஓசிடி – ஒபொசசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்
நார்த் 24 காதம் மலையாள படத்தில் பகத் பாசில் ஓசிடி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பார். யாராவது தும்மினால் 200 மீ தள்ளி நிற்பார். கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பார். சாக்ஸ, கர்ச்சீப் முதற்கொண்டு அனைத்தையும் துவைத்து சுத்தமாக வைத்த இடம் மாற்றாமல் வைத்திருப்பார்.
அளவுக்கு அதிகமான பாதுகாப்பு உணர்வுதான் ஓசிடி எனலாம். தான் பாதுகாப்பின்றி இருக்கிறோம் என்று தோன்றும் உணர்வு இதுபோன்ற விஷயங்களைச் செய்ய வைக்கிறது. உணவில் கலப்படம் இருக்குமா, கிருமிகள் இருக்குமா என ஓராயிரம் எண்ணங்கள் இருப்பதால் இவ்ர்களால் இவர்களே தயாரித்த உணவைத் தவிர்த்து பிற உண்வுகளை உண்ண முடியாது. இதனால் இவர்களின் தகவல் தொடர்பு விஷயங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
அறிகுறிகள்
வீட்டை பூட்டிவிட்டு திரும்ப திரும்ப அதனை சோதிப்பார்கள், அனைத்தும் சரியாக இருக்கிறதா என கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஏதோ பேரிடம் நடக்கப்போகிறது என்று எண்ணிக்கொண்டே இருப்பார்கள். இந்த எண்ணத்தைக் குறைக்க கையால் எதையாவது தட்டிக்கொண்டோ, பொருட்களை எண்ணிக்கொண்டோ இருப்பார்கள்.
இவர்களின் குடும்ப வரலாற்றை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். ஏராளமான பொறுப்புகளை இத்தகைய ஓசிடி நபர்களுக்கு அளிப்பது ஆபத்து. எனவே உளவியல் சிகிச்சையோடு மனநிலையை சமப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இப்பிரச்னை தீவிரமானவர்கள் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக