அளவு தெரியாமல் சாப்பிட்டாலும், கண்ட பொருட்களை எடுத்து சாப்பிட்டாலும் உடல் பாதிக்கும்!



Family, Eat, Sit, Rice, Meal, Dad, Children, Child
pixabay

பிங்கே ஈட்டிங் டிஸ்ஆர்டர்

இந்த பிரச்னை உள்ளவர்கள், எவ்வளவு சாப்பிடுகிறோம், பசிக்காக சாப்பிடுகிறோமா என்றெல்லாம் ஆராய்ந்து சாப்பிட மாட்டார்கள். சுவற்றுக்கு களிமண்ணை எடுத்து அப்புவது போல சாப்பிட்ட பிறகு ஐயையோ இவ்வளவு உணவை சாப்பிட்டு விட்டோமே என வருத்தப்படுவார்கள்.

சுயநம்பிக்கை குறைந்தவர்களாக இருப்பார்கள். மன அழுத்தம், பதற்றம் ஆகிய பிரச்னை கொண்டவர்களாக இருப்பார்கள். தனக்கு ஏற்படும் உணர்ச்சிகரமான வலிமிகுந்த பிரச்னை என அனைத்து விஷயங்களுக்கும் தீர்வாக சாப்பாட்டை நினைப்பார்கள். சந்தோஷமோ, துக்கமோ அனைத்துக்கும் தீர்வாக நிறைய உண்பார்கள். அமெரிக்காவில் நிறைய பேருக்கு இந்த பிரச்னை இருக்கிறது.

மனதில் பதற்றம் அதிகரிக்கும்போதும், பசியில்லாமல் இருக்கும்போதும் கூட சாப்பிடுவார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

தனிப்பட்டவர்களுக்கு அறிகுறிகளுக்கு ஏற்பட வகுப்புகள் நடத்தி தீர்வுகளைத் தருகிறார்கள். ஊட்டச்சத்தான உணவுகளை வழங்குவதோடு அதுபற்றிய சிறிய படிப்புகளையும் வழங்கி உணவை சாப்பிடுவதை ஒழுங்கு செய்கிறார்கள். கூடவே மன அழுத்தத்தை ஒழுங்கு செய்யும் மாத்திரைகளும் வழங்குகிறார்கள்.

 

பிகா

ஒன்று முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கையில் தென்படும் பல்வேறு பொருட்களை எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்கள். அதே பழக்கத்தை வயது வந்தவர்கள் செய்வதைத்தான் பிகா என்ற குறைபாடாக உளவியல் வல்லுநர்கள் சொல்லுகின்றனர். இதில் விலங்குகளின் குறைபாடு, கற்கள், சுவற்றிலுள்ள பெயின்ட் என பல்வேறு பொருட்கள் உள்ளன.

பொதுவாக ரத்தசோகை குறைபாடு கொண்டவர்கள், கர்ப்பிணிகளுக்கு பிகா குறைபாடு உள்ளது.

இக்குறைபாடு கொண்டவர்களுக்கு நேர்மறைய எண்ணங்களை மனதில் விதைப்பது பற்றிய அறிவுறுத்தல்களை உளவியல் வல்லுநர்கள் வழங்குகின்றனர். அடுத்து மூளையில் சுரக்கும் டோபமனைக் கட்டுப்படுத்த மருந்துகளை வழங்குகின்றனர். மேலும் ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வலியுறுத்துகின்றனர்.

 

 

 

 

 

கருத்துகள்