மன்மோகன் சிங்காக மனிதர்களை மாற்றும் மனநல பிரச்னை!
ஸிசோஅஃபெக்டிவ் டிஸ்ஆர்டர்
மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கும் மனநலப் பிரச்னை இது. உலகில் ஒரு சதவீத மக்கள்தொகையினர் இவ்வகை மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம், ஆளுமை பிறழ்வு போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு காணப்படும்.
இந்த பிரச்னையை ஒருவர் அடையாளம் காண்பது எளிது. ஒருவரை யாரும் பராமரித்து வளர்க்கவில்லை என்றால், ஒரு இடத்தில் ஒருவரால் பொருந்திப் போகமுடியவில்லை எனும் சூழல்களில் ஸிசோஅஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் பிரச்னைக்கான அறிகுறிகள் வெளிப்படும். இரண்டு வாரங்களுக்கு மேல் அறிகுறிகள் தொடர்ந்தால் கண்டிப்பாக உளவியல் வல்லுநர்களின் ஆலோசனையும், அவரின் பரிந்துரையின்படி மருந்துகளையும் சாப்பிடவேண்டும்.
துறுதுறுவென ஏதாவது வேலைகளைச் செய்தபடி இருப்பார்கள். கட்டுப்படுத்தவே முடியாது. சவாலான பலரும் செய்ய பயப்படும் விஷயங்களைச் செய்வார்கள். உணர்ச்சி கொந்தளிப்பான நிலையில் இருப்பார்கள். குறைவாகவே தூங்குவார்கள்.
ஏண்டா எருமச்சாணியை மூஞ்சியில் அப்பிய மாதிரி இருக்கே என நண்பர்களேயே கேட்க வைக்கும் அளவு சோகமாக இருப்பார்கள். மனதில் தீவிரமான வெறுமை உணர்வு இருக்கும். தற்கொலைக்கும் முயல்வார்கள்.
பொதுவான மன அழுத்த அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள்.
தனது எண்ணங்கள், செயல்பாடுகள், விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி கவனமாக இருக்கவேண்டும். இதற்காக உளவியல் வல்லுநர்கள் கொடுக்கும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். மனநிலையை சமநிலைக்கு கொண்டு வரும் மருந்துகளை சில காலம் சாப்பிடுவது மிக அவசியம்.
கட்டோனியா
எளிமையாக சொன்னால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போல நடக்கும் அனைத்தையும் கண்கலங்க பார்த்துவிட்டு அமைதியாக இருப்பார்கள். தான் நினைப்பதை வெளியே சொல்லமுடியாது. மூன்று வேளையும் சோகமாகவே இருப்பார்கள். பலூன் போல இருப்பவர்கள் ஜீரோ வாட்ஸ் பல்ப் சைசுக்கு மாறுவார்கள். ஒல்லியாக இருப்பவர்கள் ஆலமரம் போல மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறையும். வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள். தற்கொலை எண்ணம் தலைதூக்கும். தான் எதற்கும் உதவாதவன் என்று உறுதியாக எண்ணுவார்கள்.
அறிகுறிகள்
நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு எதிர்வினை இருக்காது. இவர்களே நினைத்தாலும் உடலும், மனமும் ஒத்துழைக்காது. எனவே நீங்க்கஃ காசு கொடுத்து பேச சொன்னாலும் பேசவே மாட்டார்கள்.
பிறர் என்ன பேசுகிறார்களே அதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் போல முகத்தை வைத்திருப்பார்கள். தீவிரமான வயிற்றுவலியை சந்திப்பவர்களைப் போல முகம் பல்வேறு சமிக்ஞைகளை வெளிப்படுத்தும்.
உற்சாகமாக பேசினாலும், உள்குத்தாக பேசினாலும் முகத்தில் எந்த உணர்ச்சியும் இருக்காது. கை, கால்களையும் கூட அடிக்கடி மாற்றி வைக்கமாட்டார்கள்.
ஒரே மாதிரியான உடல் அசைவுகளைச் செய்வார்கள். மற்றவர்களுடைய உடல்மொழியை அப்படியே காப்பி அடிப்பார்கள்.
வாழ்க்கையை நடத்துவதற்கான பயிற்சிகளோடு மருந்துகளையும் மனநல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உ.தா. பென்சோடையஸ்பைன்ஸ்.
இவர்களின் தெரபி, பயிற்சிகள் பயனளிக்கவில்லை என்றால், தலையில் சாதனங்களைப் பொருத்தி மின்சாரத்தை மூளைக்கு பாய்ச்சுவது இறுதிக்கட்ட சிகிச்சையாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக