டிஸ்னி படத்தை கிண்டல் செய்யும் ஹோம்வர்டு அனிமேஷன் படம்!
Cartoonbrew |
ஹோம்வர்ட்
அனிமேஷன் திரைப்படம்
இயக்குநர் : மைக்கேல் ஜான்சன்
ஆர்க், எல்ஃப் என்ற இரு இனத்திற்கும் உள்ள வேறுபாடு தீவிரமான போராக மாறுகிறது. இதனை இரு இனத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள் சேர்ந்து அமைதிக்கு கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த அமைதியை ஆர்க் இனத்தைச் சேர்ந்த படைத்தளபதியின் வம்சாவளியினரான ரோல்ஃப் விரும்பவில்லை. ஆர்க் இனத்தின் சக்திக்கு காரணமாக கற்கள் இரண்டு சிலைகள் பொதிந்து வைக்கப்படுகின்றன. அவற்றை எடுக்க எல்ஃப் இனத்தின் மந்திரப்பை தேவைப்படுகிறது.
லாய்டு, பார்ல் என்ற இரு சகோதரர்களுக்கு ஏற்படும் வேறுபாடு, ஒருகட்டத்தில் பெரும் மோதலாகிறது. இதனால் லாய்ட் தன்னுடைய பட்டமளிப்பு விழா கெட்டுவிடும் என்று தன்னுடைய தத்து சகோதரனை நியூ ஆர்க் லேண்ட் என்ற நகரத்திற்கு கொண்டு சென்று விடுகிறான். ஆனால் அங்கு நேரும் தவறு, நியூ ஆர்க் நகரம் மற்றும் எல்ஃப்டேல் நகரம் என இரு நகரங்களுக்கும் பேராபத்தாக மாறுகிறது. இப்பிரச்னையை எப்படி சகோதரர்கள் இணைந்து தடுக்கின்றனர், நகரத்தை எப்படி காப்பாற்றினர் என்பதுதான் கதை.
படத்தின் முக்கியமான அம்சம், மனிதர்களுக்குள் வேறுபாடு கூடாது. அனைவரும் ஒன்றாக அமைதியாக வாழ வேண்டும் என்பதுதான். படம் அனிமேஷன் என்றாலும் படத்தைப் பார்க்கும்போது ஏதோ ஒன்று குறைவது போல தோன்றுகிறது. முழுமையான அனிமேஷன் படமாக வந்திருக்கிறதா என்றால் ஆம் என்று சொல்ல முடியவில்லை. மைக்கேல் ஜான்சன் மற்றும் ஆரோன் விட்லின் ஆகியோர் படத்தின் கதை, திரைக்கதையில் இயங்கியிருக்கிறார்கள். இந்த படம் டிஸ்னி படத்தின் ஆன்வர்டு எனும் படத்தை நகல் செய்து பகடி செய்திருக்கிறது. இதனை மாக்பஸ்டர் படம் என்று அழைக்கிறார்கள். படங்களை ஸ்பூப் செய்வது போல அனிமேஷன் படங்களை நக்கல் செய்து சிதைக்கிறார்கள். எனவே இந்தப்படத்தை பார்க்கும் முன்பு ஆன்வர்டு என்ற படத்தை பார்த்திருப்பது நல்லது.
இவர்கள் இப்படத்திற்கு முன்பாக ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனத்தின் ட்ரோல்ஸ், டிஸ்னியின் ஃபைண்டிங் டோரி ஆகிய படத்தையும் கிண்டல் செய்து படம் எடுத்திருக்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக