இடுகைகள்

குழந்தை இறப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவர்களுக்கு எதற்கு விடுமுறை? - ஒடிசா பரிதாபம்!

படம்
தோல் பாதிப்புக்காக அருகிலிருக்கும் ஆயுர்வேத மருத்துவமனை கூட வேண்டாம் என்று ஞாயிறு ராயப்பேட்டை கிளம்பினேன். பொதுவாக எங்கள் ஊரில் அனைத்து நாட்களும் மருத்துவமனைகள் உண்டு. கொடுமுடி, சிவகிரி என இரண்டு மருத்துவமனைகளும்தான். ஆனால் ராயப்பேட்டையில் அப்படியில்லை. ஞாயிறு ஒருநாள் மட்டுமே எனக்கு விடுமுறை. நான் மற்ற வேலைநாட்களில் வந்து பார்ப்பது நடக்காத விஷயம். மருத்துவமனையில் பாதுகாவலரை அடையாளம் காட்டச்சொல்லி யோகா இயற்கை வாழ்வியல் மையம் நோக்கிச் சென்றேன். கதவு திறந்திருந்தது. உள்ளே நோயாளிகளின் இருக்கையில் ஒருவர் அமர்ந்து அங்கு பணியாற்றும் பெண் ஊழியருடன் பேசி சிரித்துக்கொண்டிருந்தார். நான் நுழைந்து மருத்துவரைத் தேடினேன். ஏன் என்கிறீர்களா? சித்த மருத்துவரைப் போல அடக்கமான மனிதர்களை எங்குமே பார்க்க முடியாது. அமைதியாக அறையில் சம்மணங்கால் போட்டு அகத்தியர் போல அமர்ந்துவிடுவார்கள். நாள்பட்ட வியாதிக்கார ர்கள் மட்டுமே வருவார்கள். அவர்களும் ஆறு மாதங்களுக்குள் காலாவதி ஆகிவிடுவார்கள்.இவர்களுக்கு வைத்தியம் செய்து அவரும் விரக்தியாகி விடுவார். உடனே ஊழியர் கேட்டார். என்னப்பா வேணும்? சித்தா டாக்டரைப் பார