இடுகைகள்

பணிப்பெண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழிலில் ஜெயிக்க உங்களை நீங்கள் நம்ப வேண்டும் - குஷ்னம் அவாரி, நிறுவனர், பனாசே அகாடமி

படம்
  குஷ்னம் அவாரி நிறுவனர், பனாசே அகாடமி விமானப் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. எப்படி விண்ணப்பிப்பது, வேலைக்கான பயிற்சி, தகுதிகள் என்ன என்பதை இன்னுமே அறியாமல் தடுமாறுகிறார்கள். இதைத்தான் குஷ்னம் அவாரி தனது பனாசே அகாடமி மூலம் தீர்த்து வருகிறார். பயிற்சி கொடுப்பதோடு வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறார்.  அவாரியின் செயல்பாடுகள் காரணமாக நான்கு ஆண்டுகளாக 2016 தொடங்கி 2019 வரையில் சிறந்த கல்வி நிறுவனம் என்ற விருதைப் பெற்றுள்ளது. மேற்கு இந்தியாவில் விமான பணிப்பெண்களை உருவாக்கும் கல்வி நிறுவனமாக மாணவர்களின் ஸ்டூண்ட் சாய்ஸ் விருதையும் பெற்றுள்ளது.  இந்த துறையில் சாதிக்க உங்களுக்கு ஊக்கம் கொடுத்த நபர் யார்? எனது அம்மா ஜரின் பாஸ்லா தான் எனக்கு ஊக்கமளிக்கும் நபர். அவர், மானேக்ஜி கூப்பர் மேல்நிலைப்பள்ளியில் தலைவராக இருக்கிறார். கல்வியாளரும் கூட. இளைஞர்களுக்கு ஊக்கமளித்து முன்னேற்றம் அளிப்பதில் அவர்தான் எனக்கு ரோல்மாடல். எனது கணவர் பெர்சி அவாரி எப்போதும் நான் எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பு கொடுத்து என்னுடன் நின்றிருக்கிறார். எனக்கு இன்று வரை ஆதரவும் ஊக்கமும் கொடு