இடுகைகள்

திரைவிமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிர வைக்கும் ரொமான்ஸ் காமெடி - பீஷ்மா படம் எப்படி?

படம்
பீஷ்மா  - தெலுங்கு இயக்கம்  வெங்கி குடுமுலா இசை மகதி சாகர் ஒளிப்பதிவு  ஆஹா... சலோ என்ற நாக சௌரியா படம் பார்த்திருப்பீர்கள் என்றால் இந்த படத்தை நம்பி பார்க்கலாம். சீரியசான கையில் வைத்திருக்கும் பாப்கார்ன் சிதறும்படி எந்த ஆபத்தும் நடந்துவிடாத கதை. நிதின் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பின்னியிருக்கிறார். வாட் எ பியூட்டி பாட்டில் அசத்தலாக டான்ஸ் ஆடியிருக்கிறார். நடித்திருக்கிறார். காமெடி செய்திருக்கிறார். இவருக்கு இணையாக படத்தில் நாயகிக்கான இடத்தையும் ராஷ்மிகா செய்திருக்கிறார். வெண்ணிலா கிஷோர் காமெடி நன்றாக இருக்கிறது. நிதினின் அப்பாவாக வரும் நரேஷ், மாமாவான பிரம்மாஜி காம்போ ரசிக்க வைக்கிறது. ஐயையோ படத்தில் ஆபத்தான சீரியசான எந்த விஷயமும் நடக்கவில்லை. நாயகனுக்கு ஒரே பிரச்னை. வேலை கிடையாது. காதலி கிடைக்கவில்லை என்பதுதான். இதனால் நாம் கவலைப்பட்டு படத்தில் என்ன மாறப்போகிறது, எனவே படத்தை காவிரி ஆறு போல அதன் போக்கிலே போகட்டும் என விட்டுவிடுகிறோம்.  ஃபீல்டு சயின்ஸ் கம்பெனி இயக்குநரும் வீக்கான வில்லன் என்பதால் எதிர்பார்க்க ஏதுமில்லை. மகதியின் பின்னணி இசை, பாடல்க

பாலத்தில் ஏறி குதிச்சிரலாமா? - ஜாலி விமர்சனம்

படம்
நேற்று ஜாலியாக யூட்யூபில் மேய்ந்தபோது கிடைத்த படம்தான் ஹௌரா பிரிட்ஜ்(ரேவோன் யாது). 1958 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான இதே பெயர்கொண்ட திரில்லர் படத்தை கூறவில்லை.  ராகுல் ரவீந்திரனின் கேசுவல் நடிப்பில் கல்யாண வீடியோ போல உருவாகியுள்ள படம்தான் ஹௌரா பிரிட்ஜ்.  பிரிட்ஜில் உருவான சிறுவயது காதல் டீனேஜ் வயதிலும் தொடர்கிறதா என்பதுதான் அதிரி புதிரி கதை. கதை கிடக்கட்டும் என ரேவோன் யாது முடிவு செய்துவிட்டதை நாமும் கேள்வி கேட்க முடியாது. நாயகி சாந்தினி சௌத்ரியின் அழகு நெளியாமல் காப்பாற்றுகிறது. கிராமத்தில் மாமாவின் காசில் செல்லமாக வளர்பவளை சிறுவயது காதலி ஸ்வீட்டி என நமபும் ஹீரோ லவ் டார்ச்சர் செய்ய, ஹீரோயின் என்ன செய்வார்? பிகு செய்வார், ஏற்க மாட்டார், சில சீன்களுக்கு பிறகு ஏற்பார். மூன்றாவது ஆப்ஷன் கரெக்ட்.  சேகர் சந்திராவின் ராதா கோபாலா எனும் இரண்டு நிமிட பாடல் மட்டுமே பாடத்தை பார்த்ததற்கு ஒரே ஆறுதல். சாந்தினி சௌத்ரி  பட யூனிட் கொடுத்த அத்தனை ட்ரெஸ்களையும் உடுத்தி வந்து ஜமாய்த்திருக்கிறார். ஆனால் அதற்கும் படக்காட்சிகளுக்கும் ஜீரோ பொருத்தம். காட்சிகளை அடுக்கியதும் மாரியம்மன் கோயில் இளங