பாலத்தில் ஏறி குதிச்சிரலாமா? - ஜாலி விமர்சனம்
நேற்று ஜாலியாக யூட்யூபில் மேய்ந்தபோது கிடைத்த படம்தான் ஹௌரா பிரிட்ஜ்(ரேவோன் யாது). 1958 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான இதே பெயர்கொண்ட திரில்லர் படத்தை கூறவில்லை.
ராகுல் ரவீந்திரனின் கேசுவல் நடிப்பில் கல்யாண வீடியோ போல உருவாகியுள்ள படம்தான் ஹௌரா பிரிட்ஜ். பிரிட்ஜில் உருவான சிறுவயது காதல் டீனேஜ் வயதிலும் தொடர்கிறதா என்பதுதான் அதிரி புதிரி கதை. கதை கிடக்கட்டும் என ரேவோன் யாது முடிவு செய்துவிட்டதை நாமும் கேள்வி கேட்க முடியாது. நாயகி சாந்தினி சௌத்ரியின் அழகு நெளியாமல் காப்பாற்றுகிறது. கிராமத்தில் மாமாவின் காசில் செல்லமாக வளர்பவளை சிறுவயது காதலி ஸ்வீட்டி என நமபும் ஹீரோ லவ் டார்ச்சர் செய்ய, ஹீரோயின் என்ன செய்வார்? பிகு செய்வார், ஏற்க மாட்டார், சில சீன்களுக்கு பிறகு ஏற்பார். மூன்றாவது ஆப்ஷன் கரெக்ட்.
சேகர் சந்திராவின் ராதா கோபாலா எனும் இரண்டு நிமிட பாடல் மட்டுமே பாடத்தை பார்த்ததற்கு ஒரே ஆறுதல். சாந்தினி சௌத்ரி பட யூனிட் கொடுத்த அத்தனை ட்ரெஸ்களையும் உடுத்தி வந்து ஜமாய்த்திருக்கிறார். ஆனால் அதற்கும் படக்காட்சிகளுக்கும் ஜீரோ பொருத்தம். காட்சிகளை அடுக்கியதும் மாரியம்மன் கோயில் இளங்கோ நாடகமன்றம் நடத்தும் சமூக நாடகத்தில் வரும் காட்சி பயங்கரம் கண்ணில் தெரிந்தது. ரீல் அந்துபோச்சு யூட்யூப் சேனலுக்கு தோதான படம் இது. படம் பார்த்ததன் ஒரே உபயோகம். ஒரு பாடல், சாந்தினி சௌத்ரி உடுத்தும் அத்தனை ஆடைகளிலும் நறுவிசான அழகாக தெரிகிறார் என்பதே. இன்டர்வெல்லில் ஹீரோயின் பாலத்தில் ஏறி ஆற்றுக்குள் குதிப்பார். படம் முடியும்போதும் பார்க்கும் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. மொட்டை மாடியிலிருந்து கீழே பார்த்தேன் . தலை சுற்றியது. சரி நர ரோகித் படம் பார்த்து தலைசுற்றலை நாளைக்கு சரிசெய்து கொள்ளலாம் என தூங்கிவிட்டேன்.
-ரோனி