பெருவின் பெண்கள் போராட்டம்!


Image result for peru rape statistics





பெருவின் பெண்கள் போராட்டம்!

கடந்தாண்டில் மட்டும் பெரு நாட்டில் 2,100 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான வன்முறை என 28 ஆயிரம் வழக்குகள் காவல்துறையில் பதிந்துள்ளதோடு 94 பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.


 அண்மையில் பெருவிலுள்ள தலைநகரான லிமாவில் சென்சஸ் பணிக்காக சென்ற பெண்ணை ஒருவர் வல்லுறவு செய்தது நாடெங்கும் கோபத்தைக் கிளற பெண்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். கடந்தாண்டு நவ.25 அன்று பாலின வன்முறை, கடத்தல் ஆகியவற்றுக்காக சமூகவலைதளம் ஆகியவற்றில் ஆதரவு திரட்டி பேரணி நடத்தியுள்ளனர். லத்தீன் அமெரிக்காவில் பெண்கள் இயக்கங்கள் பரவியுள்ளது பெருவில் மட்டும்தான். இங்கு கருக்கலைப்புக்கு தடையுண்டு. பல்வேறு கலைஞர்கள் ஒன்றிணைந்து Ni Una Menos என்ற திட்டத்தை முன்னெடுத்த பெண்கள் மீதான ்வன்முறைக்கு எதிரான பிரசாரத்தை செய்தனர். லத்தீன் அமெரிக்காவில் வல்லுறவு மூலம் கருவுறுதல் உலகிலேயே அதிகம். "பெருவில் 15-19 வயது இளம்பெண்கள் கருவுறுதலுக்கான வாய்ப்பு 60 சதவிகிதம். கவனக்குறைவான அல்லது வல்லுறவு கருக்களை அழிப்பது குற்றம் என்பதுதான் சிக்கல்" என்கிறார் ஆம்னஸ்டி அமைப்பைச் சேர்ந்த வேகா