இந்தியாவில் உயரும் தாய்மொழி பிஸினஸ்! - டெக் கம்பெனிகளின் புது ரூட்



Image result for google tamil




விரல்நுனியில் தாய்மொழி - டெக் நிறுவனங்களின் புதிய பிஸினஸ் ரூட் -  .அன்பரசு



indian government, government mandates indian language support, indian language support on mobile, indian language support on mobile 2017, electronics and information technology goods, cellular association national, indian language support, indian languages, smartphone, technology, technology news


கைப்பக்குவத்தால் நாக்கின் வழியாக இதயத்தை தொடுவது சமையல் என்றால் உணர்வு வழியாக இதயத்திற்கு நெருக்கமாவது நிச்சயம் தாய்மொழி மட்டும்தான். அம்மா என்பதற்கும் மம்மி என்பதைக் கேட்கும்போது நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அதே வித்தியாசம்தான் தாய்மொழிக்கும், ஆங்கிலத்திற்கும் இடையில் உள்ளது.

இந்தியாவில் பீறிட்டுபாயும் தாய்மொழி பாசத்தை டெக் நிறுவனங்கள் கப்பென பிடித்துள்ளன. உள்ளூரில் சரக்கை விற்க, அவர்களின் மொழியில் பேசினால்தானே வேலை நடக்கும் என்பதுதான் கான்செப்ட். கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் என அனைத்தும் சரியான நேரத்தில் கச்சிதமாக இந்தியாவில் தாய்மொழி ரூட்டைப் பிடித்துள்ளன.



Image result for typing local language in india



கூகுள் வரும் ஆகஸ்டில் தன் சர்ச்எஞ்சினில் எட்டு மொழிகளை புதிதாக சேர்க்கவுள்ளது. முன்னர் ஒன்பது இந்தியமொழிகளை சேர்த்துள்ள நிலையில் புதிய மொழிகளை இணைத்து குரல்தேடுதல் வசதியையும் கான்க்ரீட்டாக்கியுள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் பிங் தேடுபொறி குழுவும் தங்கள் பங்கிற்கு மூன்று இந்திய மொழிகளை புதிதாக தங்கள் சர்ச்எஞ்சினில் இணைத்து பிங்கை கெத்தாக பராமரிக்கிறார்கள். ஸ்மார்ட்போன்களில் தமிழில் எழுத,  அழகி, எழுத்தாணி, செல்லினம் ஆகிய மென்பொருட்கள் பரவலாக உதவுகின்றன. ஏன் உள்ளூர் மொழிகளில் மார்க்கெட் புரிந்துகொண்ட வாட்ஸ்அப்பில் இந்தி மட்டுமல்ல மராத்தியில் கூட செய்தி அனுப்பலாம்.  

23.4 கோடி இன்டர்நெட் பயனர்கள் கொண்ட இந்தியாவில்  ஆங்கிலத்தை பயன்படுத்துபவர்களின் அளவு 17.5 கோடி. 2021 ஆம் ஆண்டுக்குள் பத்தில் ஒன்பது பேர் இந்திய மொழிகளை பயன்படுத்தி மொழி இடைவெளியை குறைப்பார்கள் என்று தகவல் தருகிறது கூகுள் மற்றும் கேபிஎம்ஜி நிறுவனத்தின் அறிக்கை. 2021 ஆம் ஆண்டு வளரும் உள்ளூர் மொழி பயனர்களின் அளவு - 53.6 கோடியாக இருக்க வாய்ப்புள்ளது.
நகரங்களில் ஏழாயிரம் பேர் பங்கேற்ற இவ்வாய்வில் ஏழு உள்ளூர் மொழிகளில் இணையத்தை அணுகியவர்களின் அளவு 99 சதவிகிதம். நாட்டின் தேசிய சராசரி 78 சதவிகிதம்  எனும்போது உள்ளூர் மொழிகளின் தாக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்


Image result for typing local language in india




அதாவது, மொழியைப் பயன்படுத்தும் தேவை என்பது இல்லாமலேயே அந்த வசதி விரல்நுனியில் உங்களுக்கு கிடைத்தால் எப்படியிருக்கும்? பிஸினஸ், சாட்டிங் என அடித்து நகர்த்துவீர்கள்தானே! அதுதான் எதிர்கால பிஸினஸ் மந்திரம் கூட.  
மொழிக்கான மென்பொருள் என்பதைக் கடந்து ஆண்ட்ராய்டிற்கான ஓஎஸ் அளவு யோசித்திருக்கிறார் ராகேஷ் தேஷ்முக். "எங்கள் போன்களைப் பயன்படுத்தினால் உங்களுக்கு வரும் ஆங்கில குறுஞ்செய்திகளைக் கூட உங்களுக்கான மொழியில் மாற்றிக்கொள்ளலாம்" என தன்னம்பிக்கை தரும் ராகேஷின் இன்டஸ் ஓஎஸ், இருபத்திரெண்டு மொழிகளை ஆதரிக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனமான இது, தன்னுடைய ஸ்மார்ட்போன் ஓஎஸ் ஐடியாவுக்காக பெற்ற முதலீடு, 1.3 கோடிகள் என்றால் நம்புவீர்களா

மாதத்திற்கு இருபதுகோடி பயனர்களை பெற்றுவரும் வாட்ஸ்அப், பதினொரு இந்திய மொழிகளையும் இதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் பதிமூன்று மொழிகளையும் பயன்படுத்தும் வசதியைக் கொண்டிருக்கிறது. இணைய பயனர்களை அதிகரித்ததில் ஜியோவின் சல்லீசான போன் மற்றும் டேட்டா பிளான்களும் முக்கிய காரணம் டெக் வல்லுநர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இந்தியாவில் ஷேர்சாட் போன்ற சேவை 30 லட்சம் பயனர்களை பெற்றிருக்க ஒரே காரணம், அவை உள்ளூர் மொழியில் பல்வேறு செய்திகளை நண்பர்களுக்கு பகிர உதவுவதோடு, வாட்ஸ்அப்பிலும் அவற்றை இணைத்து பயன்படுத்தலாம் என்ற வசதிகள்தான்.

சரி, இணையத்தில் மொழிகளில் முந்துவது எது? செம்மொழியான தமிழ்தான்.
இணையத்தில் பிற மொழிகளைக் காட்டிலும் அதிவேக வளர்ச்சியில் முந்துவது தமிழ்தான். அதற்கடுத்து இந்தி உள்ளிட்ட இத்தியாதி மொழிகள். தமிழில் சிறுகதைகள் மற்றும் படைப்புகளை எழுதுவதோடு அதில் பல்வேறு போட்டிகளை நடத்தி உள்ளூர் மொழிகளுக்கு பூஸ்ட் கொடுக்கும் பிரிதிலிபி இணையதளம் இதற்கு நல்ல உதாரணம். "நான் இரண்டு ஆண்டுகளாக ஆங்கிலத்தில்தான் எழுதிவந்தேன். ஆனால் பிரதிலிபியில் தமிழில் எழுதுவது உற்சாகமாக இருக்கிறது. இன்று 400 பேர் என் எழுத்துக்களை பின்தொடர்கின்றனர் " என உற்சாகமாகிறார் சாய் பிரியதர்ஷினி.
அண்மையில் தமிழ் வலைத்தளங்களுக்கான Adsense திட்டத்தையும் கூகுள் அறிவித்தது பலரையும் தமிழில் எழுத ஊக்குவிக்கும் என நம்பலாம்.

தமிழ்வளர்க்கும் முயற்சில் வணிகநோக்கமற்று இயங்கும் ப்ரீதமிழ்இபுக்ஸ் தளமும் குறிப்பிடத்தக்கது. இணையத்தில் மொழித்தடையை உடைக்க Project Bhasa என்ற திட்டத்தை மைக்ரோசாஃப்ட் செயல்படுத்தி வருகிறது. இதோடு 2016 ஆம் ஆண்டு ஸ்விஃப்ட்கீ என்ற ஆண்ட்ராய்ட் கீபோர்ட் அப்ளிகேஷனை கையகப்படுத்திய மைக்ரோசாஃப்ட் உள்ளூர் மொழியில் தன்னை வலுப்படுத்த பதினைந்து மொழியில் மின்னஞ்சல் முகவரிகளை பயனர்களுக்கு வழங்குகிறது. விரைவில் இ-வணிக தளங்களிலும் மொழிகளுக்கான ஆப்ஷன்கள் இடம்பெறவிருக்கின்றன.தொண்ணூறுகளில் ஐந்து இணையதளங்களில் நான்கு ஆங்கிலத்தில் இருந்தன. இன்று அதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது உள்ளூர் மொழிகளுக்கான மார்க்கெட் உருவாகிவருகிறது என்பதற்கு கட்டியம் கூறுகிறது. தமிழ் வாழ்க என்ற வார்த்தை இன்று நம் விரல்களுக்கு இறங்கி உலகம் முழுக்க பரவலாகி வருவது நமக்கு பெருமைதானே!


தமிழால் இணைவோம்!

இந்தியாவிலுள்ள மொழிகள் - 780
பேசப்படும் மொழிகள் -122(10 ஆயிரம்பேர் பேசுவதன் அடிப்படையில்)
அதிகாரப்பூர்வ மொழிகள் - 22
இணையத்தில் முதன்மை பயனர்கள்(2016) - தமிழ்(42%), இந்தி(39%), கன்னடம்(37%)
2021 இல் முந்தும் பயனர்கள் - இந்தி(38%), மராத்தி(9%), பெங்காலி(8%)
(People Linguistic Survey of india 2010-13, Census 2001)

மொழியின் தாக்கம்!(பயனர் எண்ணிக்கை)

பொழுதுபோக்கு -16.7 கோடி (2016), 39.2 கோடி(2021)
சமூகவலைதளம் - 11.5 கோடி (2016), 30.1 கோடி (2021)
செய்திகள் - 10.6 கோடி 2016), 28.4 கோடி (2021)
-வணிகம் -4.2 கோடி (2016), 16.5 கோடி (2021)
(KPMG-Google report 2017.)
நன்றி: குங்குமம்