தடைபட்டு போன இலக்கிய நோபல் பரிசு!
இலக்கிய நோபல்
சர்ச்சை!
இவ்வாண்டிற்கான
நோபல்பரிசு பாலியல் ஊழல் பிரச்னைகளால் அறிவிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 1895 ஆம்
ஆண்டு நவம்பர் 27 அன்று ஆல்ஃபிரட் நோபல் எழுதி வைத்த ஆசைப்படி
இலக்கிய நோபல் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
1901 ஆம் ஆண்டு முதல் இலக்கிய நோபல்
பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1914, 1914, 1935, 1940,1941, 1942, 1943 ஆகிய ஆண்டுகளில் படைப்புகள் செறிவாக இல்லை என்பதற்காக பரிசுகள் அறிவிக்கப்படவில்லை.
தற்போது பரிசுகளை வழங்கும் ஸ்வீடிஷ் அகாடமியைச் சேர்ந்த புகைப்படக்காரர்
ஜீன் கிளாட் அர்னால்ட் பதினெட்டு பெண்களிடம் பாலியல்ரீதியாக தொல்லைகள் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு
சர்ச்சைகள் ஆகியுள்ளார். இவரும், மனைவி
கடாரினாவும் இணைந்து நடத்தும் கலாசார கிளப்புக்கு அகாடமி நிதியளித்து வருகிறது.
பல்வேறு புதிய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களுக்கு
வெளிச்சம் தந்த விருது இலக்கிய நோபல். எ.கா. ரஷ்ய பத்திரிகையாளர் ஸ்வட்லானா அலெக்ஸிவிட்ச்(2015).
ஸ்வீடிஷ் அகாடமி தன்மீதான கறையை துடைத்து உயிர்ப்புடன் மீண்டும் எழவேண்டும்
என்பதே கலைஞர்களின் விருப்பம்.