சூறையாடப்படும் மக்களின் பணம்!
ஏமாறுவது யார்?
கடந்த ஐந்தாண்டுகளில்
மட்டும்
23 ஆயிரம் வங்கி மோசடி வழக்குகளில் ஒரு லட்சம் கோடி மக்கள் பணம் வங்கிகளில்
சூறையாடப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. 2016-17 ஆண்டுகளில் 5 ஆயிரமாக இருந்த வங்கி மோசடிகளின் எண்ணிக்கை
ஏப். 2017- மார்ச் ,18 வரையிலான காலத்தில்
5,152 ஆக அதிகரித்துள்ளது கவலைப்படவேண்டிய விஷயம்.
மேற்குறிப்பிட்ட
காலகட்டத்தில்(2017-18)
காலகட்டத்தில் 28 ஆயிரத்து 459 கோடி பணமானது சிக்கலில் உள்ளது என்கிறது சென்ட்ரல் வங்கி. மேலே சொன்ன ஆண்டுகள் மட்டுமல்ல 2014 ஆம் ஆண்டிலிருந்தே
வங்கி மோசடிகளும் வாராக்கடன்களின் சுமையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
2014-15 ஆண்டுகளில் 19 ஆயிரத்து 455 கோடி ரூபாயும், 2015-16 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 698 கோடி ரூபாயும் கடன் லேபிளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நீரவ்மோடி, மெகுல் சோக்ஸி, சிவசங்கரன் மற்றும் கடனை அங்கீகரித்த வங்கி அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்கு
தொடர்ந்துள்ளது.