கழிவறை செல்ல நான்கு கி.மீ நடக்கிறோம்! - ம.பி குமுறல்

 கழிவறை 4 கி.மீ!

ஸ்வட்ச் பாரத்தை கடைபிடிக்க அனைவருக்கும் ஆசைதான். தூய்மை பேண தண்ணீர் வேண்டுமே என உதவிகேட்டு குரல் வருவது மத்தியப்பிரதேசத்தின் தமோ மாவட்டத்திலிருந்து.

மத்தியப்பிரதேசத்திலுள்ள தமோ மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம். இங்குள்ள அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் நீர் இல்லாத காரணத்தால் நான்கு கி.மீ பயணித்து கழிவறையைப் பயன்படுத்திவருகிற அவலம் நடந்துள்ளது. "நீர்ப்பற்றாக்குறையால், காலையில் வாளிகளை எடுத்துக்கொண்டு எங்கள் பள்ளி ஆசிரியரோடு கிளம்பிச் சென்று கழிவறையைப் பயன்படுத்தி வருகிறோம்" என்கிறார் பள்ளி மாணவி ஒருவர். அப்பகுதியிலுள்ள இரு போர்வெல் கிணறுகளும் கோடையில் வற்றிவிடுவதால்தான் மாணவிகளுக்கு இந்த நெருக்கடி. நீர்பற்றாக்குறை பற்றி அரசுக்கு தெரிவித்துள்ளோம் விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்" என்கிறார் தமோ மாவட்ட ஆட்சியர்.