இஸ்‌ரேல்-இரான் போர்!


Related image





இஸ்ரேல்-இரான் போர்!



கடந்த பிப்ரவரியில் இஸ்ரேல், இரான் நாட்டின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறியதிலிருந்து இருநாடுகளுக்குமான பிரச்னை தொடங்கியது. சிரியாவுக்கு ஆதரவாக இரானும், அரசு படைகளுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஓரணியில் நின்று போரிட்டு வருகின்றன. இஸ்ரேல் 20 விமானங்களிலிருந்து 70 ஏவுகணைகளை சிரியா மீது வீசியுள்ளதை ரஷ்யா அரசு உறுதி செய்துள்ளது. தற்காப்புக்காக இஸ்ரேல் இதனை செய்துள்ளது என அமெரிக்க அரசு கூறியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் சிரியா அரசுப்படையைச் சேர்ந்த 23 வீரர்கள் பலியானார்கள் என்கிறது சிரியா மனித உரிமைகள் அமைப்பு.  

1973 ஆம் ஆண்டு யோம் கிப்புர் போருக்கு பிறகு இஸ்ரேல் சிரியா மீது கடும் தாக்குதலை தொடுத்துள்ள இரண்டாம் நிகழ்வு இது. இரானும் அமெரிக்காவும் 2015 ஆம் ஆண்டு செய்துகொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக அறிவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப். இதன்விளைவாக இரான் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடைகளை கொண்டு வர அதிக வாய்ப்புள்ளது. சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர்களால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி குலைந்துள்ள நிலையில் இஸ்ரேல்-இரான் இடையிலான சண்டை அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.