ஆல் ஸ்க்ரீன் போன்- லெனோவா மாயாஜாலம்
லெனோவாவின் புதுமை!
லெனோவாவின் துணைத்தலைவர்
சாங்செங்,
சமூகவலைதளத்தில் பகிர்ந்த புதிய போன் ஏறத்தாழ ஐபோன் எக்ஸின் ஆல் ஸ்க்ரீன்
என்பதை அடியொற்றி உருவாகியுள்ளது. இப்போனில் 95 சதவிகிதம் திரைதான். லெனோவா இசட் 5, பற்றிய டீசரைத்தான் சாங்செங் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.
இதில் பதினெட்டு
காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சீனாவைச்
சேர்ந்த லெனோவா, 2.91 பில்லியன் டாலர்கள் செலவில் மோட்டரோலாவை
கூகுளிடமிருந்து வாங்கி ஹூவாய், ஜியோமி, விவோ, ஆப்போ ஆகிய போன் நிறுவனங்களை முந்தி நின்றாலும்
ஹிட் போன்கள் லிஸ்டில் இன்னும் தடுமாறியே வருகிறது. இசட்
5 போனில் செல்ஃபி கேமரா எப்படி அமைத்திருக்கிறார்கள் என்பது முக்கிய
கேள்வி. ஜியோமியின் மி மிக்ஸில் கேமராவை இயக்க கீழுள்ள பட்டனை
அழுத்தலாம்.