சர்வாதிகார அமைப்பா ஆர்எஸ்எஸ்?







Image result for rss- sanjeev kelkar






ஆர்எஸ்எஸ் வரலாறு
கடந்து வந்த பாதையும், செய்ய வேண்டிய மாற்றங்களும்
சஞ்சீவ் கேல்கர்
தமிழில் சாருகேசி
கிழக்கு பதிப்பகம்.

நூலின் தலைப்பே சொல்லிவிடும் இது எதுமாதிரியான புத்ததகம் என்று. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பணிகளில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சார்ந்த சஞ்சீவ் கேல்கர் நடுநிலையாக எழுதியுள்ளதாக அவரே கூறிக்கொள்கிறார். அப்படி அமைய வாய்ப்பேயில்லை என்பது சில அத்தியாயங்கள் படித்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதேசமயம் டாக்டர் ஹெட்கேவர் தொடங்கிய அமைப்பில் தேவரஸ் பற்றி விளக்கமாக எழுதிய ஒரே நூலாக இதுவே இருக்கலாம்.

1925 ஆம் ஆண்டு தசராவில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் இன்று மத்தியில் ஆட்சியில் உள்ளது. இந்து இந்துஸ்தான் இ்ந்தி என்ற விஷயங்களை தீவிரமாக  எதிரிகளை வன்முறையில் ஒடுக்கியாவது ஆர்எஸ்எஸ் கடைபிடிப்பது அவசியம் என இறுதியில் ஒப்புதல் வாக்குமூலமே ஆசிரியர் கொடுத்துவிடுகிறார். இதனை நேர்மை என ஒப்புக்கொள்ளலாம். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காமல் தன் மீதான 1948 ஆண்டு தடையை நீக்க ஜெயில் போராட்டம் நடத்தியதை கடுமையாக இடித்துரைக்கிறார். இதனை ஆசிரியர் செய்வதற்கான துணிச்சல் எப்படி வந்தது? நூலை எழுதும் சமயம் அமைப்பிலிருந்து முழுக்க விலகி இதனை செய்திருக்கிறார். மோடியின் எதிர்க்குரலை புறக்கணிக்கும் மனநிலை எங்கிருந்து வந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள். விமர்சனங்களை சகிக்காத ஒற்றை வழிப்பாதை அமைப்பு ஆர்எஸ்எஸ்.

ஆர்எஸ்எஸ் சிந்திக்க யோசிக்க அவசியமிலலாத அமைப்பு. தொண்டர்களுக்கும் சேர்த்து தலைவர், பொதுசெயலாளரே யோசித்து திட்டங்களை அமல்படுத்துவதை கடுமையாக விமர்சிப்பவர் கோல்வல்கரை கசக்கிப்பிழிகிறார். இதில் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்திய தேவரஸை  ஓரளவேனும் ஜனநாயகத்தை அமைப்புக்குள் கொண்டுவர முயற்சித்ததாக பாராட்டுகிறார் சஞ்சீவ் கேல்கர்.

ஆர்எஸ்எஸ் இந்துக்களை காக்க செய்த பல்வேறு பணிகளை பட்டியலிடுபவர், விஹெச்பி, பஜ்ரங்தள் ஆகியோரின் தலைமைக்கு கட்டுப்படாத தன்மை பின்னாளில் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தீராத நோயாய் பற்றுவதை சுட்டிக்காட்டுவது நடப்புச்சூழலில் ஆர்எஸ்எஸ் செயல்பாடு குறித்து அறிய உதவும். வெற்றிக்காக எதையும் சொல்லலாம், அடிக்கலாம், கலவரத்தை தூண்டலாம் என்ற தன்மையை ஆர்எஸ்எஸ் தன் பரிவார குழுக்கள் மூலமாக முன்னமே பெற்றுள்ளதை சஞசீவ் கேல்கர் மிக இயல்பான தொனியில் சொல்லிச்செல்வது பீதியளிக்கிறது.

நூலின் பின்னிணைப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பதவிகள், அதிகாரங்கள், தேர்ந்தெடுப்பது குறித்த விவரங்களை தெளிவாக எழுதியுள்ளார். இது அமைப்பின் படிநிலையை தெளிவாக அறிய உதவுகிறது. அம்பேத்கரின் விழாவோடு ஆர்எஸ்எஸ் விழாவை இணைக்கும் நோக்கம் என்னவிதமென உணரமுடியவில்லை. மேல்ஜாதி பிராமணரான சஞ்சீவை தலித் உரசிச்செல்கிறார். எனக்கு அது பிரச்னையாக இல்லை என்பது எப்படி புரிந்துகொள்வது? பொதுவான திருவிழாவில், கடையில் ஒருவர் மீது ஒருவர் படுவதை ஒருவர் ஏற்கிறார் என்றால் அவர் தாராளமான இந்து, மத, சாதி, வர்ண பேதமற்று இருக்கிறார் என்று கூற முடியுமா என்ன ? ஆர்எஸ்எஸ் அமைப்பு தூக்கிவரும் லத்திகளையும், உருவாக்கிய கலவரங்களையும், பிரச்னைகளையும் பார்த்தால் அப்படி தோன்றவில்லை. .

-கோமாளிமேடை டீம்  

பிரபலமான இடுகைகள்