ஜாலி பிட்ஸ் !
பிட்ஸ்!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
இயற்பியல் தியரிகளில் மட்டுமல்ல; பியானோ, வயலின் இசைப்பதிலும்
வல்லவர்.
அன்னாசிப்பழத்தை
வெட்டி உப்பு தடவி சாப்பிடுவது அதன் இனிப்புச்சுவையை அதிகரிக்கிறது. உப்பு,
அன்னாசியிலுள்ள அமிலங்களை நடுநிலையாக்குவதால் ஏற்படும் விளைவு இது.
தூங்கும் நேரங்களில்
உடலில் நீர்வறட்சி ஏற்படுவதைத் தடுக்கவே, தூங்கும் முன்பு தண்ணீர் குடிக்க
மூளை நம்மைத் தூண்டுகிறது.
1936 ஆம்
ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் ஹைதி, லிச்டென்ஸ்டெய்ன் நாட்டிற்கும்
ஒரு சிக்கல். இருநாட்டு கொடிகளும் ஒரே நிறம். லிச்டென்ஸ்டெய்ன் தன் நாட்டு கொடியில் ஒரு கிரீடத்தை சேர்த்து தன்னை வேறுபடுத்திக்
காட்டி போட்டியில் பங்கேற்றது.
மாயக்கனவில் தாம்
இருப்பதை உணர்ந்து கொள்ளும் வகையில் வேலைசெய்யும் பானத்தின் பெயர், ayahuasca.