இடுகைகள்

லாஃப்டஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் சீண்டல் வழக்குகளில் நேரடி சாட்சியங்களின் உண்மைத்தன்மை!

படம்
  1979ஆம் ஆண்டு, லாஃப்டஸ் ஐவிட்னஸ் டெஸ்டிமோனி என்ற நூலை எழுதினார். இதில் விபத்து நடக்கும்போது அதைப் பார்க்கும் நேரடி சாட்சியங்கள் எப்படி தகவல்களை தவறாக புனைந்து கூறுகிறார்கள் என்பதை செய்த ஆய்வுகளின் மூலம் விளக்கியிருந்தார்.  பின்னாளில் லாஃப்டஸ், தடயவியல் உளவியல் மீது ஆர்வம் கொண்டார். 1980ஆம் ஆண்டு குழந்தைகள் மீது பாலியல் சீண்டல் பற்றிய வழக்கில் அவர் வல்லுநராக இயங்கி இருந்தார். நினைவுகள் என்பது காலப்போக்கில் பல்வேறு தவறான தகவல்களால் மாறுகிறது. தவறான தகவல்களால் நிரம்புகிறது என்பதை அடையாளம் கண்டார். ஆனால் இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது எளிதாக இல்லை.  தொண்ணூறுகளில் ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இதில் ஜார்ஜ் ஃபிராங்களின் என்பவர், தனது மகள் எய்லீனின் தோழியைக் கொன்றார் என்பது காவல்துறையின் வழக்கு. ஆனால் இதில் நேரடி சாட்சியான எய்லீன் கூறிய தகவல்கள் நிறைய மாறுபட்டன. பல்வேறு முறை அவை தவறாகவும் இருந்தன. ஆனாலும் நீதிமன்ற ஜூரிகள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனையை வழங்க பரிந்துரைத்தனர். தவறுதலாக பல்வேறு விஷயங்களை சேர்த்து, இணைத்து நினைவுபடுத்திக் கூறுவதைஃபால்ஸ் மெமரி சிண்ட்ரோம் என்று உளவிய