மறுவாழ்வுக்கு முயலும் ரௌடியை தடுக்கும் அதிகார சக்திகள்!
நகரம் ஶ்ரீகாந்த், ஜெகதிபாபு, காவேரி ஜா இயக்கம் சிசி சீனிவாஸ் இசை சக்ரி தமிழில் தெலுங்குப்பட மோகம் கொண்ட சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தின் ரீமேக். ரைட் என்ற முன்னாள் ரௌடி தனது நண்பன் இறந்தபிறகு திருந்தி வாழ நினைக்கிறார். ஆனால், அதை தடுக்க காசிம்பாய், இன்ஸ்பெக்டர், அரசியல் தலைவர் ஆகியோர் முனைகிறார்கள். இறுதியில் என்னவானது என்பதே கதை. முஸ்லீம் என்பவர் மாஃபியா தலைவராக, கொலை, கொள்ளை, கடத்தலை செய்பவராக இருக்கிறார். இதெல்லாம் எண்பதுகளில் வந்த படத்தின் அடையாளம். அதேதான். பெரிய மாறுபாடு இல்லை. ஒருவரிடம் வேலை செய்பவன், சுயமாக யோசித்து தன் இஷ்டப்படி இருப்பதாக கூறுவது சற்று வினோதமாக உள்ளது. நாயகனுக்கு, காசிம் பாயின் மகனுடன் விரோதம் உருவாகிறது. நாயகன் கொலை செய்யும் உத்தி, திறமை காசிம் பாயின் மகனுக்கு வருவதில்லை. அவனது திறமை சூழ்ச்சி, சதி. அதை நம்புகிறான். நாயகனைப் பொறுத்தவரை தனது குழுவினர் அனைவரையுமே திட்டத்தில் ஈடுபடுத்தி கொலையை கூட்டுத்திட்டமாக மாற்றுகிறான். அனைவருக்கும் கொலையில் முறையான பங்களிப்பு இருக்கிறது. படத்தில் வரும் தொடக்க காட்சி கொலை, உத்வேகம் தரக்கூடியது. ஆனால...