கெத்து காட்டும் அப்பா, பம்மி பதுங்கும் மகன் - அந்தாரிவாடு - தெலுங்கு - சிரஞ்சீவி, தபு, ரைமான் சென்

 

 

 

 

 


 

 

 


 

அந்தாரிவாடு

சிரஞ்சீவி, ரைமா சென், தபு

இந்த படம் சினிமா என்றாலும் கூட பார்க்க சன் டிவி சீரியல் போலவே இருக்கும். கவனம்

படத்தில் இரண்டு சிரஞ்சீவி. ஒருவர் மென்மையானவர். இன்னொருவர் அடிதடி, சவுண்டு பார்ட்டி.

அப்பா, சிரஞ்சீவி தான் அந்தாரிவாடு. இவர், கட்டிடம் கட்டும் மேஸ்திரியாக இருக்கிறார். தனது மனைவி இறந்தபிறகு, திருமணம் செய்யாமல் மகனை நல்லபடியாக வளர்த்து கல்வியில் உயர உதவுகிறார். அவரும் படித்து முடித்து டிவி ஒன்றில் ஃபேஸ் டு ஃபேஸ் எனும் நிகழ்ச்சி நடத்தும் நெறியாளராக நாட்டுக்கே அறிந்த முகமாக இருக்கிறார்.

இந்த நிலையில் அப்பா சிரஞ்சீவி, தொழிலாளர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அடிதடியில் இறங்குவது வழக்கம். இப்படி மக்களுக்கு நீர் கொடுக்கும் தண்ணீர் லாரியை பார்ட்டிக்கு பயன்படுத்தும் காண்ட்ராக்டர் ஒருவரின் மகனை போட்டு சாத்து சாத்து என கனல்கண்ணன் உதவியுடன் அடிக்கிறார். இதனால் அவர்கள் கூட்டம் சிரஞ்சீவியை அதாவது கோவிந்த ராசுலுவை தாக்க திட்டம் தீட்டுகிறது.

இந்த நேரத்தில் கோவிந்தராசுலுவுக்கு புதிய கட்டுமான வேலை கிடைக்கிறது. அதை கொடுப்பது, வீரேந்திரா எனும் கோவிந்தராசுலுவின் பழைய நண்பர். அதாவது, கோவிந்த் அப்படி நினைக்கிறார். ஆனால் வீரேந்திரா கூலி ஆட்கள் மேல் சற்று அருவெருப்பு கொண்டவர்.இதை கோவிந்த் உணரும் போது மகனுக்கும், வீரந்நிரனின் மகளுக்கும்  காதல் தொடங்கி இரண்டு டூயட்டுகளை வேறு ஆடிவிடுகிறார்கள்.

படத்தில் பிரம்மானந்தம், சுனில் காமெடி சற்று ஆறுதலாக இருக்கிறது. மூத்த சிரஞ்சீவிக்கும் தபுடன் நெருக்கமான பாடல் காட்சி ஒன்று உண்டு. ரசிகர்கள் விசில் அடித்து பார்த்து மகிழலாம்.

வீரேந்திரா அவரது பள்ளி நண்பர் கோவிந்த் தனது மகனுக்கு அவரது மகளை கல்யாணம் பேச வரும்போது,. கல்யாணத்திற்கு நீ வரக்கூடாது அது மட்டுமில்லை. அவன் வாழ்க்கையில் உன் உறவை துண்டிச்சுக்கோ என சொல்லுகிறார். இதனால் அப்பா கோவிந்த், மனமுடைகிறார். இதனால் மகனை விட்டு சண்டையிட்டு பிரிவது போல நாடகமாடுகிறார். இதை அறிந்து மகன் திருமண நிச்சயத்தின்போது, வீரேந்திராவுக்கு அவமானம் ஏற்படுத்தி அவரது மகளை மணக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு தான் சீரியல்தனங்கள் தொடங்குகின்றன. அப்பா, மகன் பாசத்தை மருமகள் எப்படி புரிந்துகொள்கிறாள் என்பதை படத்தின் இறுதியில் சொல்லுகிறார்கள். இறுதி்க்காட்சி படுமோசமாக கிராபிக்ஸ் காட்சிகளால் கண்றாவியாகி இருக்கிறது.

படத்தில் கோவிந்தராசுலு தனது வீட்டுப்பக்கம் வரும் எந்த பெண் கிடைத்தாலும்  குத்தாட்டும் போட்டு நம்மை மகிழ்விக்கிறார். மது, சோறு, குத்தாட்டம் என எப்போதும் செம எனர்ஜியாக இருப்பது அவர்தான். பிறகு படத்தின் டைட்டிலே அவருக்குத்தானே?

செம மசாலா ----

கோமாளிமேடை டீம்

 

கருத்துகள்