பாரனாய்ட்டும், ஸிஸோபெரெனியாவும் ஒரே குறைபாடா?
ஆளுமை பிறழ்வு குறைபாட்டில் பாரனாய்ட் மற்றும் ஸிஸோய்ட் மற்றும் ஸிஸோடைபல் ஆகிய இரண்டுக்கும் சில ஒத்த அறிகுறிக்ள் உண்டு. அதாவது, நிகழ்காலம் மெல்ல மறந்துவிடும். புதிய பாத்திரங்கள், உலகத்தை உருவாக்கியபடி வாழ்வார்கள்.
ஸிஸோய்ட் குறைபாடு உள்ளவர்களுக்கு சமூக உறவுகள் குறைவாகவே இருக்கும். இவர்கள் தங்களது உணர்ச்சிகளையும் குறைவாகவே வெளிப்படுத்துவார்கள். தங்களுக்கே இப்படியென்றால் பிறரைப் பற்றி நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். கவலையே பட மாட்டார்கள்.
ஸிஸோடைபல் குறைபாடு உள்ளவர்களுக்கு, நெருங்கிய உறவுகளைக் கையாள்வது கடினமாக இருக்கும். இவர்களை எதிர்கொண்டு புரிந்துகொள்வது நெருங்கிப் பழகுபவர்களுக்கு சவால். அப்படியெனில் புதிதான ஆட்களுக்கு எப்படி இருக்கும்?பீதியூட்டும் குணம் கொண்ட மனிதர்களாக தெரிவார்கள் என்று அர்த்தம்.
ஆளுமை பிறழ்வு விவகாரத்தில் ஒருவருக்குள் பல்வேறு மனிதர்கள் எந்த வித ஒற்றுமையும் இல்லாமல் இருப்பது சாத்தியம். மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என இதைக் கூறலாம். மனம் குறிப்பிட்ட வாழ்க்கை சம்பவத்தில் காயமுற்று அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும்போது உயிரை, உடலைக் காக்கும் நோக்கத்தில் மனம் ஒரு மாய ஆளுமையை உருவாக்குகிறது. இந்த ஆளுமை, நிஜத்தில் எதிர்கொள்ள முடியாத சூழலை எளிதாக கைவசப்படுத்தும் திறனுடன் இருப்பார். நிஜ சூழலை எதிர்கொள்ள முடியாத நிஜ மனிதருக்கு எவையெல்லாம் பலவீனமோ அதற்கு எதிர்ப்பதமாக மனம் ஆளுமையை உருவாக்குகிறது. குறிப்பிட்ட சூழல் அழுத்தங்களால் இந்த ஆளுமை வெளியே வரும். பிறகு, அப்படியே அந்த மனிதரின் மனத்தில் அழுந்திப் போகும். இதைத்தான் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களாக ஒருவர் வேறுபட்ட உடல்மொழியுடன் தோன்றுவதைக் காட்டுகிறார்கள்.
மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டரும், ஸிஸோபெரெனியாவும் வேறுவேறு. ஸிஸோபெரெனியா குறைபாடு உள்ளவர்கள் நிகழ்கால உலகத்துடன் தொடர்பிலேயே இருக்க மாட்டார்கள். இதிலும் கூட மைல்ட் - தொடக்கம் , மாடரேட்- மத்திய நிலை, சிவியர் - தீவிரமான நிலை என படிநிலைகள் உண்டு. இதற்கேற்ப நோயாளியின் அறிகுறிகள் மாறுபடும்.
படம் - பின்டிரெஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக