காந்தியும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குமான முரண்பாடு!

 வைரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அறிவியல் அடிப்படையில் அது சிக்கலான கார்பன் அணுக்களைக் கொண்டது. பல்வேறு அழுத்தங்களைத் தாங்கி உருவாகிறது. அதனை பட்டை தீட்டும்போது வைரமாக மாறுகிறது. காந்தியும் கூட அப்படிப்பட்ட இயல்புகளைக் கொண்டவர்தான். அவரும் வைரத்தை ஒத்தவர்தான். காந்தியும் பல்வேறு வாழ்க்கைச் சூழல்களை சந்தித்து நெருக்கடியில்தான் சிறந்த மனிதராக தலைவராக மாறினார். தனது கொள்கை, செயல்பாடுகள், செயல்பாடுகளை செய்யும்போது நேர்ந்த தவறுகள் என அனைத்தையுமே நூலாக பதிவு செய்துள்ளார். பழமையான இந்தியாவில் இருந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து காந்திக்கு கருத்துகள் இருந்தன. அவற்றை எதிர்தரப்பிடமும், மக்களிடமும் முன்வைத்துக்கொண்டே இருந்தார். இதற்காக இந்தியன் ஒப்பீனியன், யங் இந்தியா, நவஜீவன், ஹரிஜன் ஆகிய பத்திரிகைகளைப் பயன்படுத்திக்கொண்டார். இதைத் தாண்டியும் அவர் உலகிற்கு கூறும் செய்தி என்ன என்று கேட்டபோது, என்னுடைய வாழ்க்கை தான் என்று பதில் சொன்னார்.


பிரிவினைவாதத்தை பல்வேறு வடிவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படுத்தி வருகிறது. ஆனால் வெளிப்படையான செய்திகளில் பார்த்தால், இந்த அமைப்பு கலாசார செயல்பாடுகளை செய்வதும், பேரிடர் உதவிகளை செய்வதுமாக காட்டிக்கொள்ளும். பல்வேறு மொழிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கான பத்திரிகைகள், ஊடகங்கள் உண்டு. 1964ஆம் ஆண்டு முதல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனையிலும் இணைக்கப்பட்டார். இப்படி இணைப்பது அமைப்பை ஜனநாயகத் தன்மை கொண்டதாக மாற்றியது. அதாவது வெளிப்பார்வைக்கு மட்டுமாவது..காந்தியை உரிமை கொண்டாடி தனதாக்கி அவரை கீழே தள்ளுவதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம்.


ஹெட்கேவர் ஆர்எஸ்எஸ் அமைப்பு தோற்றுவித்தார். இவர் தொடக்கத்தில் காங்கிரஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். பிறகு காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் பங்கேற்றவர்தான். காங்கிரஸ் அமைப்பின் செயல்பாடுகளால் மன விலக்கம் ஏற்பட்டு நாடு தழுவிய தனி அமைப்பு ஒன்றை உருவாக்க நினைத்து தொடங்கியதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பு. 1934ஆம் ஆண்டு, இந்த அமைப்பிற்கு பேசுவவதற்காக காந்தி வந்தார். இந்து, முஸ்லீம் பிரச்னைகளில்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. முஸ்லீம்கள் தனி நாடு கேட்பது பற்றி பேசியவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைகளில் ரத்தக்கறைகள் இருப்பதாக கேள்விப்படுகிறேன். அவர்கள் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்கள் வெளியே வருவது முக்கியம் என்று பேசினார். காந்தி ஆர்எஸ்எஸ்சில் பேசும்போது அதன் தலைவரான ஹெட்கேவர் அங்கு இல்லை.


காந்தியைப் பற்றிய தீராத விவாதம் ஏற்படுத்தும் சில விஷயங்கள் உண்டு. அவை, விடுதலை பெற்றபிறகு காங்கிரஸ் அமைப்பை கலைத்துவிடவேண்டும். அதனை நலத்திட்ட இயக்கமாக மாற்றவேண்டும் என்று கூறினார் காந்தி. அடுத்து, பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபோது, அந்நாட்டிற்கு 55 கோடி ரூபாயை அளிக்க இந்திய அரசை வற்புறுத்தினார். காந்தி, தன்னுடைய அரசியல் வாரிசாக ஜவகர்லால் நேருவை தேர்ந்தெடுத்தார். இவை இந்தியா பற்றி பேசும்போது இன்றைக்கும் சரியா, தவறா என்ற விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. சமகால நிகழ்ச்சிகள், பிரச்னைகளைத் தாண்டி காந்தி இன்றும் பேசுபொருளாக இருப்பது முக்கியமானது.


ராவ் பகதூர் ராய்

இந்தியா டுடே


கருத்துகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை

பயணிகள் பேருந்தில் பாலச்சந்திரனோடு ஒரு பயணம்