பல் ஆளுமை பிறழ்வு வரலாறு
இருப்பதிலேயே வரம் என்றும் சாபம் என்றும் மனிதர்கள் பெற்ற ஒரு அம்சத்தைச் சொல்லலாம். அதுதான் நினைவுகள். இவைதான் நமக்கு நல்ல விஷயங்களையும், தவறான விஷயங்களையும் கற்றுத் தருகிறது. அதுதான் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் நீதியை உணர்த்தவும் அறிவுச் சேகரமாகவும் உள்ளது. அவை சில காயங்களை கு்ணப்படுத்துகிறது. வரலாற்றில் கருப்பின அடிமைத்தனங்களைப் பற்றிய அறியவும் உதவுகிறது. பல தலைமுறைகளுக்கு நினைவுகளைக் கடத்தி கவனமாகவும் நாம் இருக்க உதவுகிறது.
சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் அனுபவங்கள், ஆளுமை பிறழ்வு அனுபவங்களை மனங்களில் உருவாக்குகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது. இந்த ஆளுமை பிறழ்வு சிக்கலும் கூட வலியான நினைவுகளை திரும்ப திரும்ப நினைவுபடுத்திக்கொள்வதால்தான் நேருகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்ற பாதிப்பு அதிகம் வெளித்தெரியாத ஒன்று. இன்று இந்த பாதிப்பை நோயாளிகள் வெளிப்படையாக சொல்லுகிறார்கள். அதற்கான சிகிச்சையும் பெறுகிறார்கள். வலியும், வேதனையும் நினைவுகளாக மூளையில் பதிந்துவிடுகிறது. இதில்தான் அத்தனை நல்லவைகளும் அல்லவைகளும் உருவாகின்றன. நினைவுகள் என்பது கணினிக் காலத்தில் அந்தளவு முக்கியம் என்று கூற முடியாது. ஆனால் 1876ஆம் ஆண்டு கிரேக்கத்தில் சிறந்த நினைவுத்திறன் கொண்டவர்களை ஆளுமைகளாக மதித்தனர். அதுவும் ஒரு திறனாக மதிப்பிடப்பட்டது.
ட்ராமா என்றால் உங்களுக்கு சீன, கொரியா டிவி தொடர்கள் நினைவுக்கு வந்தால் உங்களை இந்த நூலைப்படிக்க நான் கட்டாயப்படுத்தமுடியாது. மருத்துவத்துறையில் ட்ராமா என்பதற்கு மோசமான சம்பவம், காயம் என்று கூறலாம். இன்று இதனை நிறைய மருத்துவ டிவி தொடர்களில் கூட சொல்லுகிறார்கள். ஒருவர் தன் வாழ்நாளில் சந்திக்கும் மோசமான நிகழ்ச்சி, வருத்தப்படும் சம்பவம் என இதைப் புரிந்துகொள்ளலாம். இதை சிக்மண்ட் ப்ராய்ட் தான் தனது ஆய்வில் முதன்முறையாக பயன்படுத்தினார். 1890ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த சொல்லைப் பயன்படுத்தி, மருத்துவத்துறையினர் அதை புரிந்துகொள்ள வைத்தார். அதிர்ச்சி, மோசமான சம்பவம் ஆகியவற்றை நினைவுடன் இணைத்து சொன்னார்.
பல் ஆளுமை பிறழ்வை முதலி ஸிஸோபெரெனியா நோயுடன் இணைத்து மருத்துவர்கள் புரிந்துகொண்டவர். மாயக்காட்சிகள், கருத்துகளை சரியாக பேச முடியாத தன்மை, வினோதமாக நடந்துகொள்வது என அனைத்தும் பல் ஆளுமை பிறழ்வு கொண்டவர்களுக்கும் ஸிஸோபெரெனியா ஏற்பட்டவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லாத நிலைமை இருந்தது. இதனால் மருத்துவர்கள் அதை தவறாக புரிந்துகொண்டனர். பிறகுதான், ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பல் ஆளுமை பிறழ்வு, ஸிஸோபெரெனியாவின் அறிகுறிகளை கொண்டிருக்கலாம் என புரிந்து தெளிந்தனர்.
கிரேக்க மொழியில் ஸிஸோபெரெனியா என்பதற்கு பிரிந்த மூளை என்று அர்த்தம். இதனை கருத்தில் கொண்டுதான் பல் ஆளுமை பிறழ்வை அடையாளப்படுத்தினர். இதே ஸிஸோபெரெனியாவை, பிராய்ட் பல்வேறு முறை வெவ்வேறு கருத்தில் பயன்படுத்தி இருக்கிறார்.
1980ஆம் ஆண்டு டயாக்னாஸ்டிக் அண்ட் ஸ்டாடிஸ்டிகல் மேனுவல் ஆப் மென்டல் டிஸார்டர் என்பதை அமெரிக்க உளவியல் சங்கம் உருவாக்கியது. பல் ஆளுமை பிறழ்வு என்பதை கீழ்க்கண்டவாறு விவரித்திருந்தனர்.
தனிநபரின் வேறுபாடு கொண்ட ஆளுமைகள் குறிப்பிட்ட நேரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலை.
ஒருவரின் குணம் என்பது அந்த நேரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமையாக இருக்கும்
இப்படி ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை என்பது தனித்த நடை, உடை, பழக்க வழக்கங்களை, உறவுகளை கொண்டுள்ளது.
மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்பதை அப்படிக் கூறலாமா என்பதில் மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்களிடையே கடுமையான விவாதம் எழுந்தது. ஒருவரின் மனதில் உடைந்துபோன ஆளுமைகள் சுயமாக தனி ஆளுமையாக உருவாவது என்பதை பர்சனாலிட்டி என்று கூற முடியாது. என உளவியலார் பிலிப் கூன்ஸ் கூறினார். 1984ஆம் ஆண்டு பிலிப், இப்படிக் கூறியதை முதலில் யாரும் ஏற்கவில்லை. பிறகுதான், பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கூறியபிறகு மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்பது டிசோசியேட்டிவ் ஐடென்டிட்டி டிஸார்டர் என பெயர் மாற்றம் பெற்றது. சிறு துண்டுகள் என்று கூறுவது பொருத்தமானது என்றாலும் அதுவும் தனி ஆளுமைதான் என பின்னாளில் கருத்து உருவானது.
பல் ஆளுமை பிறழ்வு் பற்றி அறிவதற்கான நேர்மையான நூல் என்று டயாக்னாசிஸ் அண்ட் ட்ரீட்மெண்ட் ஆஃப் மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் (ஃபிராங்க் புட்னம்) எழுதிய நூலைக் குறிப்பிடலாம். இதை எழுதிய புட்னம், "அனைத்து பிறழ்வு வகைகளைப் போலவே பல் ஆளுமை பிறழ்வையும் நாம் கையாளவேண்டும். இந்த பிறழ்வில் பயன்படுத்தும் வார்த்தைகளை ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். இதில் நினைவுகள், அடையாளம், சுயம் ஆகியவற்றை புரிந்துகொண்டு செயல்படுவது ஆளுமைகளை அடையாளம் காண்பதை விட கடினமாக உள்ளது" என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக