இடுகைகள்

பசிபட்டினி பட்டியல் 2021 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒன்றிய அரசின் பசிபட்டினி பற்றிய ஆவேசமும் உண்மையும்!

படம்
  பசிபட்டினி தொகுப்பு பட்டியல் 2021 யாருக்கும் தான் செய்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொடுத்தால் உடனே கோபம் வந்துவிடும். காரியம் நடந்துகொண்டிருக்கும்போதே முடிவை சொல்கிறாயே என்று ஒன்றிய அரசும் கூட பட்டினிதொகுப்பு பட்டியல் முடிவை அறிவியல் ஆதாரமே இல்லை என்று எளிமையாக கூறிவிட்டது.  மொத்தம் 116 நாடுகள் உள்ள பட்டியலில் இந்தியா இப்போது 101 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடத்தைப் பிடித்த தற்கே எல்லாம் எங்கள் கட்சி பிரதமரின் உழைப்பால் வந்தது என கட்சி தொண்டர்கள், ஐடி விங்குகள், சமூகவலைத்தள விளக்குகள் கொண்டாடிக்கொண்டு உள்ளனர். ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இப்படி சமாளிப்பு பதில் சொல்வது இத்தோடு நிற்காது. எளிதாக வணிகம் செய்வதற்கான பட்டியலிலும் தடுமாற்றம், பத்திரிகை ஜனநாயக பட்டியலிலும் பின்னடைவு, எகனாமிஸ்ட் பத்திரிகை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா குறைத்தே கணக்கு காட்டுகிறது எனசெய்தி வெளியிட்டுள்ளது. இப்படி பல்வேறு ஆய்வுகளையும் தவறு என சுட்டிக்காட்டவேண்டிய தேவையும் அவசியமும் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.  பட்டினிப் பட்டியலை எடுக்க முக்கியமான அம்சங்கள் சில உள்ளன.