இடுகைகள்

கோபத் காண்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய சிறைகளுக்குள் நூல்களுக்கு தடை!

படம்
  ஜிஎன் சாய்பாபா, மனித உரிமை செயல்பாட்டாளர் கடந்த மாதம் எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கௌதம் நவ்லகா, பிஜி வுட்ஹவுஸ் என்ற எழுத்தாளரின் நூல்களை வாசிக்க கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.  மும்பையிலுள்ள தலோஜா சிறை நிர்வாகம் இதற்கு அளித்த பதில், பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று.  சிறைத்துறை அதிகாரிகள் நூல்களை, காகிதங்களை, நோட்டுகளை ஏன் அகராதிகளை கூட கைதிகளுக்கு கொடுக்காமல் இருப்பதும், பிறகு வழக்குரைஞர்கள் இதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்கு செல்வதும் புதிதல்ல. இப்படி சமூக செயல்பாட்டாளர் ஜோதி ஜக்தாப் என்பவருக்கு நூல்கள் மறுக்கப்பட்ட, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த உத்தரவு வந்து சேர்ந்தும் கூட இரண்டு மாதங்கள் ஆனபிறகே நூல்கள் ஜோதிக்கு வழங்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளுக்கு நூல்கள் மேல் உள்ள வெறுப்பை  இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.  2020ஆம் ஆண்டு நாக்பூர் சிறையில் ஜிஎன் சாய்பாபா அடைக்கப்பட்டிருந்தார். இவர் தெலுங்கு மொழி நூல்களை வாசிக்க கேட்டிருந்தார். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் அதை காதில் போட்டுக்