இடுகைகள்

இட ஒதுக்கீடு - பெண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை மறந்துபோனது ஏன்?

படம்
பெண்கள் எங்கே? ஐந்து சட்டசபை தேர்தல்களுக்கான பரபரப்பு தொடங்கிவிட்டது. தேசியவாதம், மதவாதம், ராமருக்கு சொந்தமான இடம் எது, பாரத் மாதா கீ ஜே சொல்லலாமா? வேண்டாமா? என விவாதங்கள் பரபரக்கின்றன. ஆனால் இதில் மறந்துபோன விஷயம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடவசதி மசோதாவை. சத்தீஸ்கரின் 90 தொகுதிகளில் 24 தொகுதிகளில் பெண்களின் பெரும்பான்மை ஆண்களை விட அதிகம். மத்திய பிரதேசத்திலுள்ள 231 தொகுதிகளில் 51 தொகுதிகளில்(24 தொகுதிகளில் 80% ) பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மிசோரத்தில்   பத்தொன்பதாயிரத்து 399 பெண் வாக்காளர்கள் உண்டு. ஆனால் பெண் வேட்பாளர்கள் உள்ளார்களா? என்றால் பைனாகுலர் வைத்துத்தான் தேடவேண்டும். மாநில அளவில் 8 சதவிகிதமும், மத்திய அரசு அளவில் பதினொரு சதவிகிதம் மட்டுமே உள்ளனர். 56 ஆண்டுகால ஜனநாயக அரசில் மக்களவையிலுள்ள பெண்களின் எண்ணிக்கை பெருமளவு உயராததற்கு என்ன காரணம்? 1962 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 6 சதவிகிதமாக இருந்த பெண்களின் எண்ணிக்கை 11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளவு 50 சதவிகிதம். தற்போது 6 லட்சம் பெண் பஞ்சாயத்