இடுகைகள்

பொக்கிஷம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொக்கிஷத்தை தேடிச்செல்லும் திருடர்களின் வம்சாவளி!

படம்
                பொக்கிஷத்தை தேடிச்செல்லும் திருடர்களின் வம்சாவளி! தொங்கலா பண்டி அல்லரி நரேஷ், தன்யா அல்லரி நரேஷின் படங்கள் அனைத்துமே வேடிக்கையான வேறு உலகில் நடப்பவை. சின்ன பட்ஜெட் படம் என்பதால், கதை ஆந்திரப் பிரதேசத்தில்  நடக்கும் பாடல்கள் மட்டுமே வெளிநாடுகளில் காட்சிபடுத்தப்படும். அதேதான் இந்தப்படத்திலும் கடைபிடித்திருக்கிறார்கள். கதையைப் பார்ப்போம். மூன்று திருட்டு நபர்களின் வாரிசுகள் ஒன்றாக கூடி தங்களது தாத்தா சேகரித்து வைத்த பொக்கிஷங்களை எப்படி கையகப்படுத்துகிறார்கள் என்பதுதான் கதை. பொக்கிஷங்களை தேடிச்செல்லும் கதை என்றால், புனைவாக அழகாக புதிர்களை வைத்து உருவாக்கியிருப்பார்கள் என நினைத்தீர்களா? அப்படியெல்லாம் கிடையாது. அனைத்துமே எளிமையாக நரேஷின் காமெடி டைமிங்கை வைத்து நடந்தேறுகிறது. நாயகன் ஒரு திருடன், அவன், அவனது மாமா, மாமா பிள்ளை என வம்சமே திருடர்கள். இதுபோலவே இன்னொரு பெண்கள் குழு இயங்குகிறது. அதற்கு கோவை சரளா தலைவி. அவரின் இரு தங்கைகளில் ஒருவரே நாயகி. நாயகியை இருமுறை கட்டிப்பிடித்தே காதல் வர வைக்கிறார் நாயகன். காதல் வந்தபிறகு எப்படி புர...

சீனப் பொக்கிஷங்களை ஜப்பான்காரனுக்கு விட்டுக்கொடுக்க மறுக்கும் நாயகன்!

படம்
  ஷூ ஃபூ டிரஷ்சர் சீன திரைப்படம்  ஒன்றரைமணிநேரம் ஐக்யூயி ஆப் கல்லறைக்கு சென்று பொக்கிஷங்களை தேடும் படங்களுக்கென இருக்கும் சில அம்சங்களைப் பார்ப்போம்.  நாயகன் பொக்கிஷ புதிர்களை அவிழ்ப்பதில் திறமைசாலி. அவனுக்கென நகரில் கலைப்பொருட்களை விற்கும் கடை வைத்திருப்பான். தங்கம், வெள்ளி பாத்திரங்களை கொள்ளையிடுவதில் ஆர்வம் இருக்காது.  நாயகனின் நண்பன் பேராசை கொண்ட வியாபாரி. சூதாடி கலைப்பொக்கிஷங்களை அடகு வைப்பான். இவனுக்காகவே நாயகன் வெளிநாட்டுக்காரர்கள் அல்லது எதிரிகளோடு கூட்டு சேர்ந்து கல்லறைகளை கண்டுபிடித்து உள்ளே செல்லவேண்டியிருக்கும். இந்த காட்சிகள் கடுப்பாக இருந்தாலும் திரை நடிகர்கள் காமெடி என்பதாக பாவ்லா செய்வார்கள்.  நாயகி பெரும்பாலும் நாயகனின் தோழியாக இருப்பாள். எதிரியாக இருந்து நட்பாகி தனது காணாமல் போன அப்பாவை கல்லறைக்குள் தேடிக்கொண்டிருப்பாள். நாயகன் ஊடல் கொள்வதும், ஊடாடி மகிழ்வதும் இவருடன்தான்.  சீன படங்களில் ஜப்பானியர்கள் மேல் துவேஷம் மறைக்கப்படாமல் இருக்கும். அந்த நாட்டினர், சீனாவின் மீது படையெடுத்து நிறைய அக்கிரமங்கள் செய்திருக்கிறார்கள். அதை இன்றுவரை மறந்து...

மக்களின் நோய் தீர்க்க மருந்து தேடி ஆபத்தான கல்லறையைத் திறக்க செல்லும் பொக்கிஷக் குழுவின் கதை!

படம்
  moutain porter சீன திரைப்படம் ஒன்றரை மணிநேரம் ஐக்யூயி ஆப் இதுவும் கொடூரமான குணம் கொண்ட ராணியின் கல்லறையைத் திறக்கும் கதைதான். ஆனால் அதை திறக்கும் காரணம், பொக்கிஷமல்ல.  கிராமத்து மக்களை பாதிக்கும் நோயைத் தீர்க்க மருந்து தேடி கல்லறைக்கு வருகிறார்கள்.இவர்களைக் கொல்ல பின்தொடர்ந்து கொள்ளைக்கூட்டம் ஒன்று வருகிறது. இறுதியில் அனைவரும் இறந்துவிட நாயகனும் நாயகியும் மட்டும் பிழைக்கிறார்கள். இறுதியாக கூட மருந்து கிடைப்பதில்லை. அதைத்தேடி அலைவதோடு கதை முடிகிறது.  இந்த கதை தொடங்கும்போது, நாயகன் ஒரு கண்ணாடி ஒன்றைத் தேடி வருகிறான். அதை இன்னொரு இளம்பெண் திருடிக்கொண்டு செல்கிறாள். அவள் ஒரு அடிமை. கடவுள் திருவிழாவில் பலியிடுவதற்காக அவளை கட்டிவைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணைத்தான் நாயகன் காப்பாற்றுகிறான். ஆனால் அவள் உண்மையில் யார் என்பது இறுதியாக தெரியும்.  இந்த படத்தில் சுவாரசியம், அவரின் அப்பா, அவரின் நண்பர் ஆகியோர் ராணியின் குகைக்கு சென்று மாட்டிக்கொள்கிறார்கள். அதில், நாயகனின் அப்பா காணாமல் போகிறார். நண்பர் எப்படியோ காயங்களோடு தப்பித்துக்கொள்கிறார். இதனால், நாயகனுக்கும் அவனது அப்...

ஜப்பானிய கூலிப்படையிடமிருந்து அமரத்துவ பொக்கிஷங்களை காக்கப் போராடும் நாயகன்!

படம்
  ஃபாக்குயின் - லாஸ்ட் லெஜண்ட் சீன திரைப்படம் ஐக்யூயி ஆப் ஒரு மணிநேர திரைப்படம் சீன கலாசாரத்தில் பிரிட்டிஷார், ஜப்பானியர்கள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இன்றும் கூட சீனாவில் ஜப்பானியர்களை தங்களது தீவிர எதிரியாக நினைக்கும் குடிமக்கள் அதிகம். இதற்கு முக்கியமான காரணம், ஜப்பானியர்கள் சீனாவில் போரிட்டு செய்த ஆக்கிரமிப்புகளும், அக்கிரமங்களும்தான். அதை இந்த தொடரும் பிரதிபலிக்கிறது்.  சீனத்தின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த கல்லறை உள்ளது. அதிலுள்ள பொக்கிஷங்களை கொள்ளையடிக்க ஜப்பானிய ஆட்கள் முயல்கிறார்கள். அதை சீன நாட்டைச் சேர்ந்த நாயகன் சாமர்த்தியாக தடுத்து அனைவரையும் கல்லறையில் பிணமாக்குகிறான். ஜப்பானியர்கள் எதற்கு சீனாவில் உள்ள ஏதோ ஒரு கல்லறையைத் தேடி வரவேண்டும்? இங்குதான் அமரத்துவம் தரும் கனிகளைக் கொண்ட யுன்சி என்ற மரம் உள்ளது. அதற்காகத்தான் பேராசை கொண்ட மனிதர்கள் வேறு நாட்டுக்கே பயணம் செய்து வருகிறார்கள். பொக்கிஷங்களைக் கொள்ளையிட முயல்கிறார்கள்.  படத்தில் நாயகன் எந்திர புதிர் அமைப்புகளை திறக்கும் சூட்சுமம் கற்றவன். அவனது நண்பன், கதவுகளை திறக்கும் வழிமுறைகளை அறிந்தவன். தோழி, மல...

மறைந்துள்ள பாலைவன நகரின் பொக்கிஷத்தை எடுக்க நடக்கும் போராட்டம்! - சாண்ட் சீ - சீன தொடர்

படம்
  சாண்ட் சீ - பிரதர் ஹாவோ   சாண்ட் சீ (2018) சீன டிவி தொடர் 53 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர்கள் – லீ ஸே லூ, மாவோ குன் யூ, சூ ஷி திரைக்கதை எழுத்தாளர்கள் – ஸாங் யுவான் ஆங்க், டாங்க் ஷி சென் அம்மா இல்லாமல் அப்பாவின் அடி, உதைகளை வாங்கி வளர்கிறான் லீ சூ, பல்கலைக்கழக தேர்வை எழுதவெல்லாம் விருப்பமில்லாத மனநிலை. இவனுக்கு இருக்கும் ஒரே தோழன், சூ வான். பணக்காரன். இவன் நன்றாக படிப்பவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனது பள்ளியில் மாணவிகளை படமெடுத்து வைத்து, யாரோடு டேட்டிங் போகலாம் என யோசிப்பவன்.   அடுத்து, ஹாவோ. இவன் பள்ளியில் படிப்பவனல்ல. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நிறுவனத்தை ஹாவோவின் பாட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாவோ ஆதரவாக இருக்கிறான். இவனது வேலை சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பது.   பிறகு பணக்காரன் பள்ளி மாணவனான சூ வானை ஏதோ ஒருவகையில் மிரட்டி காசைப் பிடுங்குவது… இந்த மூன்றுபேர்களின் நட்புதான் தொடரின் முக்கியமான அம்சம். இது கடந்த காலத்தில் நட்பாக இருந்த அயர்ன் ட்ரையாங்கில் என்ற மூவரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.   ...

சீனாவின் கலைப்பொக்கிஷங்களை விற்கும் தொழிலதிபர் குழுவோடு மோதும் தடய அறிவியல் துறை - ட்ரூத் - சீன டிவி தொடர்

படம்
  ட்ரூத் - சீன  டிவி தொடர்  யூட்யூப்  தடய அறிவியல் பற்றிய நிறைய தொலைக்காட்சி தொடர்களை உலகமெங்கும் எடுத்து வருகிறார்கள். ட்ரூத் சீனாவில் ஒளிபரப்பாகிய டிவி தொடர்.  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கேப்டன் லின் என்பவர், வழக்கு ஒன்றை விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில் மரணமடைகிறார். அவர் மரணமடைவது காரோடு நீருக்குள் மூழ்கி என்பது அப்போதைக்கு பரபரப்பான குற்றச்செய்தியாகிறது. அதற்குப் பிறகு அப்பாவை வழிகாட்டியாக கொண்ட லின்னின் மகள், காவல்துறையில் சேர்ந்து தடய அறிவியல் துறையில் வேலை செய்கிறாள். பின்னாளில் அவர்கள் ஒரு வழக்கை துப்பறிய அதில் அவளது அப்பாவின் மரணமும் இடையில் ஒன்றையொன்று சந்திக்க கடந்தகால குற்றங்களை எப்படி தேடித்துருவி குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள் என்பதே மையக் கதை.  பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவு சார்ந்த கதை கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே, சண்டைக்காட்சிகளை எதிர்பார்க்க வேண்டியிருக்காது. அப்படி பார்த்தாலும் இதில் சண்டைகள் ஏதும் கிடையாது. எப்படி தடய அறிவியல் மூலம் அரசு வழக்குரைஞர்க்கு வழக்கின் சாட்சியங்களை உறுதிப...

வாசிக்க வேண்டிய சிறுவர் கதைகள்!

படம்
  கிராண்ட்பா ஃபிராங்க் கிரேட் பிக் பக்கெட் லிஸ்ட் ஜென்னி பியர்சன் ஓவியம் டேவிட் ஓ கானல் அஸ்பார்ன் புக்ஸ் ஃபிராங்கிற்கு அவரது பாட்டியிடமிருந்து பணம் கிடைக்கிறது. அதுவும் அவன் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.... ஆனால் அதைப் பெற நிறைய விதிகள், நிபந்தனைகள் உள்ளன. கூடவே புதிய தாத்தாவும் வருகிறார். பணத்தை பிராங்க் எப்படி செலவு செய்தான், அதனால் அவனுக்கு மகிழ்ச்சி கிடைத்ததா என்பதே கதை.  ஹவ் டு டிரெய்ன் யுவர் டாட் கேரி பால்சன் மேக்மில்லன்  பனிரெண்டு வயது சிறுமி கார்ல், தனது அப்பாவை எப்படி தனக்கேற்றபடி பயிற்சி கொடுத்து மாற்றுகிறாள் என்பதே நூலின் கதை. கார்லின் அப்பா, அவளுக்கு எடுத்து தரும் துணி கூட பழையதாகவும் குப்பையில் இருந்து எடுத்து வந்தது போலவும் இருக்கிறது. அப்பாவின் இப்படிப்பட்ட செயலால், தான் நண்பர்கள் மத்தியில் அவமானப்படுவதாக கார்ல் நினைக்கிறாள். இதனை எப்படி மாற்றுகிறாள் என்பதே கதை.  கிரேட்டா அண்ட் தி கோஸ்ட் ஹன்டர்ஸ்  சாம் கோப்லேண்ட் ஓவியம், சாரா ஹோம் கிரேட்டாவிற்கு திடீரென பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது. அவளது பூர்வீக வீட்டில் தனது தாத்தாவைக் கூட பார்க...

தாத்தாவின் கடனை அடைக்க பொக்கிஷத்தை தேடிச்செல்லும் பேத்தி! - ஃபைண்டிங் ஓகானா

படம்
                ஃபைண்டிங் ஓகானா !   Director: Jude Weng Produced by: Ian Bryce Writer(s): Christina Strain அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஹவாய்க்கு இடம்பெயருகிறது ஓர் குடும்பம் . தாத்தாவின் வீட்டுக்கு வரும் சிறுமி , பொக்கிஷம் பற்றிய டைரியை தாத்தாவின் வீட்டிலிருந்து கண்டெடுக்கிறாள் . அப்புறமென்ன , பொக்கிஷ வேட்டைதான் . படத்தின் கதையைப் பார்த்தால் ஏதோ இந்தியா ஜோன்ஸ் ஜூனியர் என்று பெயர் வைக்காமல் படம் எடுத்திருக்கிறார்களோ என்று தோன்றும் . ஆனால் படம் நெடுக குடும்ப பாசம் , இயற்கை மீதான நேசம் , முன்னோர்களுக்கு மரியாதை , ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது என ஏராளமான சமாச்சாரங்களை வைத்து கண்கலங்க நெகிழ்ச்சியாக படம் சொல்கிறார்கள் .    நியூயார்க்கிலிருந்து வரும் குடும்பத்தின் டீன் ஏஜ் பையன் , சிறுமி , அம்மா ஆகியோரோடு ஹவாய் தீவில் வாழும் தாத்தா , அவரின் நெருக்கமான இளம் பெண்ணும் அவளது தம்பியும்தான் கதை நாயகர்கள் . ராபின்சன் பரௌன் என்ற தீவுக்கு வந்த வெள்ளைக்காரர் , புனித குகையில் பொக்கிஷங்களை மறைத்து வைத்திருக்கும் தகவலை நோட்...