மக்களின் நோய் தீர்க்க மருந்து தேடி ஆபத்தான கல்லறையைத் திறக்க செல்லும் பொக்கிஷக் குழுவின் கதை!

 








moutain porter


சீன திரைப்படம்


ஒன்றரை மணிநேரம்


ஐக்யூயி ஆப்



இதுவும் கொடூரமான குணம் கொண்ட ராணியின் கல்லறையைத் திறக்கும் கதைதான். ஆனால் அதை திறக்கும் காரணம், பொக்கிஷமல்ல.  கிராமத்து மக்களை பாதிக்கும் நோயைத் தீர்க்க மருந்து தேடி கல்லறைக்கு வருகிறார்கள்.இவர்களைக் கொல்ல பின்தொடர்ந்து கொள்ளைக்கூட்டம் ஒன்று வருகிறது. இறுதியில் அனைவரும் இறந்துவிட நாயகனும் நாயகியும் மட்டும் பிழைக்கிறார்கள். இறுதியாக கூட மருந்து கிடைப்பதில்லை. அதைத்தேடி அலைவதோடு கதை முடிகிறது. 


இந்த கதை தொடங்கும்போது, நாயகன் ஒரு கண்ணாடி ஒன்றைத் தேடி வருகிறான். அதை இன்னொரு இளம்பெண் திருடிக்கொண்டு செல்கிறாள். அவள் ஒரு அடிமை. கடவுள் திருவிழாவில் பலியிடுவதற்காக அவளை கட்டிவைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணைத்தான் நாயகன் காப்பாற்றுகிறான். ஆனால் அவள் உண்மையில் யார் என்பது இறுதியாக தெரியும். 


இந்த படத்தில் சுவாரசியம், அவரின் அப்பா, அவரின் நண்பர் ஆகியோர் ராணியின் குகைக்கு சென்று மாட்டிக்கொள்கிறார்கள். அதில், நாயகனின் அப்பா காணாமல் போகிறார். நண்பர் எப்படியோ காயங்களோடு தப்பித்துக்கொள்கிறார். இதனால், நாயகனுக்கும் அவனது அப்பாவின் நண்பருக்கும் மனஸ்தாபம் உருவாகிறது. அவர்தான் அவனை பராமரித்து வளர்க்கிறார். அப்பா, அவரது நண்பர், அவர் வளர்க்கும் நாயகன் அனைவருக்குமே குகைகளில் பொக்கிஷங்களைத் தேடி  அலைவதே பிழைப்பு.


இந்த நிலையில்தான் மருந்து ஒன்றைத் தேடி லார்ட் மா என்பவரின் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்குதான் மர்மமான முறையில் நிறைய சம்பவங்கள் நடக்கின்றன. மா என்பவரே கண் போன்ற வினோத உயிரினத்தால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார். தலைகீழாக குகை ஒன்றில் மாட்டிக்கொண்டு உயிரை விட்டிருக்கிறார். அதைப் பார்க்கும்போது, சிரிக்கவா பயப்படுவதா என்று தெரியவில்லை. இறந்துபோனவரின் தலையை வெட்டி எடுத்து வந்து அதில் உள்ள வினோத கண்ணை பிடுங்கி அதை மாய கண்ணாடியில் காட்டி நடந்த சம்பவங்களை அறிந்துகொள்கிறார்கள். 


கொள்ளைக்காரன் கொடூரமான ஆள். அவன் நாயகன் கூட்டத்தை குகைக்கு வராமல் தடுக்க நினைக்கிறான். ஆனால் அவன் ஆட்களை வெடிகுண்டு விபத்தில் மாட்ட வைத்துவிட்டு நாயகன் வகையறா தப்பிக்கிறது. கூடவே, அப்பாவி இளம்பெண்ணும் மறைந்து கூடவே வருகிறாள். தொடரில் காதல், களேபரம், பொறாமை என ஏதும் கிடையாது. முழுக்க குகைக்குள் செல்வது, பல்வேறு பொறியமைப்புகளை முடுக்கி மாட்டிக்கொள்வது என கதை நகர்கிறது.


கதையில் பொருந்தாத பகுதி என்றால் கிளைமேக்ஸ்தான். அதில், படத்தின் கதைக்கு எந்த முடிவும் இல்லை. இந்த கதையை நாயகன் உணவகத்தில் உள்ள குழந்தைகள் சிலருக்கு சொல்வது போல வைத்து முடித்துவிட்டார்கள். நாயகனும், நாயகியும் மருந்தை தேடி மீண்டும் கிளம்புகிறார்கள். அதுதான் இறுதிக்காட்சி. 


இது தொடர் அல்ல. திரைப்படம். எனவே, ஏதோவொன்று தீராதது போல, திருப்தி தராத ஒன்றாக உள்ளது. 


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்