வைத்தியரின் கல்லறையைத் திருடச்செல்லும் நல்லவர்களின் கூட்டம்!

 











மெடிசின் கிங் காபின்


சீன திரைப்படம் 


ஒருமணிநேர படம் 



நாயகன், சிறு மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அதற்கு ஒரு இளம்பெண் வருகிறாள். வந்தவள், தன்னுடைய மாமா, நாயகனின் அப்பாவுடன் மெடிசின் காபின் பள்ளத்தாக்குக்கு சென்றார். ஆனால் திரும்பவில்லை. உன்னுடைய அப்பா தான் வராதபோது மகன் உன்னை அழைத்துக்கொண்டு அதே இடத்திற்கு செல்லச்சொன்னார் என கடிதம் ஒன்றைக் காட்டுகிறாள். நாயகனின் உதவியாளர் அவளை கிண்டல் செய்து பேச, மருத்துவமனையில் சண்டை தொடங்குகிறது. 


நாயகியின் இனக்குழுவில் 35 வயதுக்கு மேல் யாருமே வாழ்வதில்லை. ஆயுள் முடிந்துவிடும் சாபம் உள்ளது. அதை சரிசெய்யவே அவள், நாயகனை அழைத்துக்கொண்டு பள்ளத்தாக்குக்கு சென்று நோய்க்கு தீர்வறிய நினைக்கிறாள். கூடவே, வெளிநாட்டு மருத்துவர்களின் வற்புறுத்தலில் ரவுடி ஒருவரும் நாயகனை அதே இடத்திற்கு செல்லலாம் வா என்று அழைக்கிறார். நாயகனுக்கு அங்கு செல்வதில் பெரிய விருப்பமும் இல்லை. மறுப்பும் இல்லை. அவன் அங்கு சென்று எதையும் பெறவேண்டும் என நினைக்கவில்லை. 


நாயகன், நாயகி, கூடவே மொட்டைத்தலை வெளிநாட்டுக்காரர்களின் கையாள் ஆகியோரோடு போகும்போது, சிறு கொள்ளைக்கூட்டமும் அவர்களோடு இணைகிறது. அவர்களின் நோக்கம் வைத்தியரின் கல்லறையைக் கொள்ளையிட்டு பொக்கிஷங்களை கைப்பற்றுவது. ஒரு மன்னர் என்றால் ராஜபோக வாழ்க்கை. ஆனால் வைத்தியரின் கல்லறையில் வைத்திய திரட்டு ஏதேனும் இருக்கலாம். பொக்கிஷம் எப்படி இருக்கும?


ஆசைக்கு லாஜிக் கிடையாது அல்லவா?


திருடர்கள் பொக்கிஷ திருட்டு முயற்சியில் இறங்கி பலரும் சிலந்தி கடித்து இறந்துபோகிறார்கள் எஞ்சிய மூவரும் நச்சுபுகையால் மாயக்காட்சிகளைக் கண்டு மயங்கி விழுகிறார்கள். 


அதே குகைக்கு நாயகனும் தனது கூட்டத்தோடு வருகிறான். அவனும் குகைக்கு வந்துவிட்டு, சிலந்திகளோடு சண்டைபோட்டு அவற்றை நெருப்பிட்டு எரித்துவிட்டு பிறகு நீருக்கடியில் உள்ள ஓரிடத்திற்கு வந்து சேர்கிறான். அங்குதான் அவர்களுக்கும் மாயக் காட்சிகள் தோன்றுகின்றன. நாயகி அனைவருக்கும் இல்யூசன் தீர்க்கும் மாத்திரைகளைக் கொடுக்கிறாள். மருத்துவராக நாயகன், நாயகியின் தீர்வே இல்லாத நோயைத் தீர்க்க முயன்றே பயணத்தை ஏற்பான். நாயகிக்கு ஏற்பட்ட ஆபத்துகளை முன்நின்று தீர்ப்பான். இந்த தொடரில் நாயன் சிறப்பாக சண்டை போட்டிருக்கிறார். குகைக்குள் நடைபெறும் சண்டைகளில் அவருக்கும் நாயகிக்குமான புரிந்துணர்வு அற்புதமாக உள்ளது. 


கொள்ளைக்காரத் தலைவனின் நோக்கம் ஒன்றும் புரியவில்லை. தனது மக்கள் பிளேக் நோய் வந்து சாகிறார்கள் என்று மருந்து தேடி வந்தேன் என்கிறார். பிறகு, நாயகனுடன் தனியாக அமர்ந்து பேசும்போது என்னுடைய முதலாளிக்கு தீர்க்க முடியாத நோய். அவர்தான் என்னை இங்கே அனுப்பினார் என்று கூறுகிறார். அதேநேரம் வெளிநாட்டினர் அனுப்பி வைத்தவர், மருந்து குறிப்புகளை தேடி அபகரிக்கவே வருகிறார். மருந்தை கொண்டு வராதபோது அவர் கொல்லப்படுவார் என்ற நிலை. ஆனால் அவரும் இறுதியில் திருந்திவிடுகிறார். மக்கள குணப்படுத்தவே மருந்து என்ற நாயகனின் லட்சியத்தை ஏற்றுக்கொள்கிறார். இது கதையாக, காட்சியாக யோசிக்கும்போதும் பொருந்தவில்லை. 


இறுதியாக நாயகன், தனக்கு கிடைத்த பொக்கிஷ மருத்துவச்சுவடியை மனப்பாடம் செய்துவிட்டு கொள்ளைக்கூட்ட தலைவனிடம் கொடுத்துவிடுகிறான். உதவி தேடி வந்த நாயகியை அவளுடைய இனக்குழுவின் சாபக்கேடான நோயிலிருந்து காக்கிறான். பதிலுக்கு அவளுடைய காதலைப்பெற்றுக்கொள்கிறான் என்பதோடு கதை நிறைவு பெறுகிறது. சீனத்தைப் பொறுத்தவரை சாதி, மதம், குடும்ப பெருமை தீவிரமாக இருக்கிறது. நாயகன், பொக்கிஷங்களை தேடிச்சென்றாலும் அதற்கென உள்ள குடும்ப விதிகளைப் பின்பற்றுகிறான். அவனது குடும்பம் பற்றி பலரும் குறிப்பாக கொள்ளைக்கூட்டத்தினர் கூட அறிந்திருக்கிறார்கள். 


எல்லோரும் நல்லவர்கள் என்ற வகையில் சீன நாட்டு விக்ரமன் படம் இது. 


கோமாளிமேடை டீம் 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்